நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் சிவனும் பார்வதியும் ஆண் பாதியாகவும் பெண் பாதியாகவும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மலைக் கோயில் பகுதியானது அதிக அளவில் குரங்குகளின் வாழ்விடமாக திகழ்கிறது.
மாடி குடியிருப்பு பகுதிகளில் செல்லும் கேபிள் ஒயர் போன்றவற்றில் குரங்குகள் தொங்கி விளையாடுகின்றன. மேலும் தனியாக இருக்கும் குழந்தைகளை சிலநேரம் குரங்குகள் அச்சுறுத்துவதால் குடியிருப்பு வாசிகள் ஒரு வித பயத்துடனே இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் மலைப்பகுதியில் இருந்து 4 - 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்கும் குரங்குகள் படையெடுத்து செல்கின்றன. ஆகையால் ஊருக்குள் குரங்குகள் வருவதை தடுக்க வேண்டும், அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.