இந்த மலையில் இருந்து கீழே செல்லும் வழியில் வாசலூர்பட்டி அமைந்திருக்கிறது. இங்கே சுடசுட சுவையான மூலிகை சூப் கிடைக்கும். அத்துடன் படகு சவாரியும் செய்யலாம். பாதுகாப்பான படகு சவாரியை மேற்கொள்ள இந்த இடம் சிறந்தது என்கின்றனர் சுற்றுலா பயணிகள். இதற்கான கட்டணம் 50 ரூபாய். அருகிலேயே தாவரவியல் பூங்காவும் அமைந்துள்ளது. இந்த இடம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.