கொல்லிமலை மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைச் செடிகளுக்கு என்றே சிறந்து விளங்குகிறது. இங்குள்ள அறப்பலீசுவரர் கோவில், தோட்டக்கலை தோட்டம், மூலிகைத் தோட்டம், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், பெரியசாமி கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், அன்னாசி பழத்தோட்டங்கள், வியூ பாயிண்ட் மற்றும் தொலைநோக்கி இல்லம் போன்ற சுற்றலா பயணிகளை கவரும் இடங்கள் உள்ளது. ஒவ்வொரு வருடமும், ஆகஸ்ட் மாத்ததில் இங்கு வல்வில் ஓரி திருவிழா கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில் சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் இருக்கிறது. அழகிய மலையின்மீது அமைந்துள்ள அற்புதமான திருக்கோயில் இது. அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலமாக சிறந்த விளங்குகிறது. மேலும் கோடு என்றால் மலை என்றும் மலையுச்சி என்றும் அர்த்தம்.
நாமக்கல் மாவட்டத்தில் குதித்து கும்மாளம் போட எங்காவது வெளியே செல்லனும் நினைத்தால் நிச்சயமாக இந்தக் இடத்திற்கு சென்று நேரத்தை செலவிட உகந்ததாக இருக்கும். பரமத்தி வேலூர் அருகே அமைந்துள்ள ஜேடர்பாளையம் படுகை அணை மற்றும் ராஜவாய்க்கால். இது விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சென்று சந்தோஷமாக இருக்க உகந்த ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது.
இதேபோல் மற்றொரு இடமும் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிறது. ஒரு நாள் பயணமாக எங்காவது வெளியே சென்றுவிட்டு வரலாம் என்று நினைத்தால் நிச்சயமாக இந்தக் இடத்திற்கு வரலாம் அதுதான் ஓடப்பள்ளி தடுப்பணை மற்றும் பூங்கா. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளி தடுப்பணை மற்றும் பூங்கா அமைந்துள்ளது.
இந்த பூங்கா கடந்த 2012 ஆண்டு ரூபாய் 89 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் பின் மக்கள் வர்த்து அதிகமானதால் பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. ஏனென்றால் ஆற்றுக்குளியல், சுடச்சுட மீன் வறுவல், நிம்மதியாக ஓய்வெடுக்க பூங்கா என பல விசயங்கள் இங்கு உள்ளது. நிச்சயமாக ஒருநாள் பயணமாக வருபவர்களுக்கு உகந்ததாக இடமாக ஓடப்பள்ளி தடுப்பணை மற்றும் பூங்கா அமையும். செய்தியாளர்: மதன், நாமக்கல்.