அருகே ஒரே பிரசவத்தில் 2 பெண் கன்றுகளை ஈன்ற பசுவை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்கின்றனர்.
2/ 4
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூர் பகுதியில் வசிக்கும் விவசாயி குமாரசாமி - லோகாம்பாள் தம்பதியினர். இவர்கள் விவசாயத்தோடு 3 மாடுகளையும், ஆடுகளையும் வளர்ந்து வருகின்றனர்.
3/ 4
இந்நிலையில், இவர்கள் வளர்த்து வரும் சிந்து வகை பசு ஒன்று ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் கன்றுகளை ஈன்றுள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
4/ 4
கன்றுகளை ஈன்ற பசுவிற்கு இது மூன்றாவது பிரசவமாகும். மூன்றாவது பிரசவத்தில் இரண்டு பெண் கன்றுகளை ஈன்ற பசுவை பலரும் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். புதிதாக பிறந்த இரண்டு கன்றுகளுக்கு ராமாயி, லட்சுமியாயி என பெயர் சூட்டியுள்ளனர்.