முகப்பு » புகைப்பட செய்தி » நாமக்கல் » Namakkal News : அநாகரிகமாக நடந்தால் வெளியேற்றப்படுவீர்கள்.. குமாரபாளையம் பூங்காவில் எச்சரிக்கை பலகை.. பொதுமக்கள் நிம்மதி..

Namakkal News : அநாகரிகமாக நடந்தால் வெளியேற்றப்படுவீர்கள்.. குமாரபாளையம் பூங்காவில் எச்சரிக்கை பலகை.. பொதுமக்கள் நிம்மதி..

Namakkal Latest News : நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி பூங்காவில் அநாகரிகமாக நடந்து கொள்வோர் வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.. (படங்கள் - செய்தியாளர் : மதன் - நாமக்கல்)

  • 18

    Namakkal News : அநாகரிகமாக நடந்தால் வெளியேற்றப்படுவீர்கள்.. குமாரபாளையம் பூங்காவில் எச்சரிக்கை பலகை.. பொதுமக்கள் நிம்மதி..

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி பூங்காவிற்கு வருபவர்கள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், அநாகரிகமாக நடந்தால் வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 28

    Namakkal News : அநாகரிகமாக நடந்தால் வெளியேற்றப்படுவீர்கள்.. குமாரபாளையம் பூங்காவில் எச்சரிக்கை பலகை.. பொதுமக்கள் நிம்மதி..

    குமாரபாளையத்திலிருந்து எடப்பாடி செல்லும் வழியில் அமைந்துள்ளது நகராட்சி பூங்கா. இப்பூங்காவானது கடந்த 2013 ஆண்டு சுற்று வட்டார மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பதற்காக 70 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 38

    Namakkal News : அநாகரிகமாக நடந்தால் வெளியேற்றப்படுவீர்கள்.. குமாரபாளையம் பூங்காவில் எச்சரிக்கை பலகை.. பொதுமக்கள் நிம்மதி..

    இப்பூங்காவில் இயற்கை எழில் கொஞ்சும் வகைகள் நிறைய மரங்கள், பூச்செடிகள், பொதுமக்கள், சிறுவர்கள் பொழுதுபோக்கும் வகையில் ஊஞ்சல்கள், ராட்டினங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 48

    Namakkal News : அநாகரிகமாக நடந்தால் வெளியேற்றப்படுவீர்கள்.. குமாரபாளையம் பூங்காவில் எச்சரிக்கை பலகை.. பொதுமக்கள் நிம்மதி..

    மேலும் இப்பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்கள் எந்நேரமும் குடோனில் இருந்து வேலை பார்ப்பதால் அவர்களுக்கு முக்கிய  பொழுதுபோக்கு இடமாக திகழ்கிறது இந்த பூங்கா.

    MORE
    GALLERIES

  • 58

    Namakkal News : அநாகரிகமாக நடந்தால் வெளியேற்றப்படுவீர்கள்.. குமாரபாளையம் பூங்காவில் எச்சரிக்கை பலகை.. பொதுமக்கள் நிம்மதி..

    இந்த பூங்காவில் காதலர்களின் வருகை அதிகரித்துள்ளது. பொது மக்கள், குழந்தைகள் வந்து செல்லும் பொது இடம் என்று அறியாமல் முகம் சுழிக்கும் வகையில் காதலர்கள் நடந்து கொள்வதாக புகார்கள் அவ்வப்போது எழுகிறது. மேலும் ஒரு சிலர் நபர்கள் இங்கு அநாகரிகமாகவும் நடந்து கொள்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 68

    Namakkal News : அநாகரிகமாக நடந்தால் வெளியேற்றப்படுவீர்கள்.. குமாரபாளையம் பூங்காவில் எச்சரிக்கை பலகை.. பொதுமக்கள் நிம்மதி..

    இதனையடுத்து  பூங்காவில் அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 78

    Namakkal News : அநாகரிகமாக நடந்தால் வெளியேற்றப்படுவீர்கள்.. குமாரபாளையம் பூங்காவில் எச்சரிக்கை பலகை.. பொதுமக்கள் நிம்மதி..

    பூங்கா தொடங்கி சில ஆண்டுகள் வரையிலும் நீரூற்றுக்கள், புல்வெளிகள் மற்றும் இங்குள்ள சிலைகள், பொதுமக்களை கவரும் விதமாக இருந்தது. ஆனால் தற்போது நீரூற்றுக்களில் தண்ணீர் இல்லாமலும், புற்கள் காய்ந்த நிலையிலும் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 88

    Namakkal News : அநாகரிகமாக நடந்தால் வெளியேற்றப்படுவீர்கள்.. குமாரபாளையம் பூங்காவில் எச்சரிக்கை பலகை.. பொதுமக்கள் நிம்மதி..

    மேலும் பூங்காவின் விளையாட்டு உபகரணங்களின் வண்ணங்கள் மங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனை முறையாக கவனித்து பூங்காவை பராமரிப்பு செய்தால் இன்னும் அதிகளவில் மக்கள் மகிழ்வுடன் வருகை புரிவார்கள் என்று பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    MORE
    GALLERIES