முகப்பு » புகைப்பட செய்தி » நாமக்கல் » கொல்லி மலைக்கு ட்ரெக்கிங் போக ப்ளானா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

கொல்லி மலைக்கு ட்ரெக்கிங் போக ப்ளானா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

Namakkal kollimalai hills | நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட விரும்புபவர்கள் வனத்துறையினர் விடுத்துள்ள இந்த அறிவிப்பை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

  • 19

    கொல்லி மலைக்கு ட்ரெக்கிங் போக ப்ளானா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

    தமிழகத்தில் உள்ள மலைப்பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், மாவட்டத்தில் உள்ள குரங்கணி, சேலத்தில் உள்ள ஏற்காடு, மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் இருக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 29

    கொல்லி மலைக்கு ட்ரெக்கிங் போக ப்ளானா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

    இங்கே டிரக்கிங் செல்ல விரும்புபவர்களுக்காக தனி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. மலையேறும் பயிற்சிக்காக அந்தந்த பகுதி மாவட்ட வன அலுவலர், வனச்சரகர் ஆகியோரிடம் முறைப்படி அனுமதி பெற்று பின்னர் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 39

    கொல்லி மலைக்கு ட்ரெக்கிங் போக ப்ளானா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

    இந்தியாவில் இருக்கும் அழகிய சுற்றுலாத்தலங்களில் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையும் ஒன்று. இந்த மலைக்கு சுற்றுலா செல்பவர்கள், பைக் பயணம் செல்பவர்கள், டிரக்கிங் செல்பவர்கள் என ஏராளமானோர் இந்த அழகிய மலையில் ஆங்காங்கே வட்டமிட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கமுடியும்.

    MORE
    GALLERIES

  • 49

    கொல்லி மலைக்கு ட்ரெக்கிங் போக ப்ளானா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

    பழமை சிறப்பு வாய்ந்த இந்த கொல்லிமலையில் காரவள்ளி ஏணிக்கல் தடம், புளியங்சோலை, முள்ளுக்குறிச்சி, எருமப்பட்டி, பேளுக்குறிச்சியை அடுத்த பழனியப்பர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 59

    கொல்லி மலைக்கு ட்ரெக்கிங் போக ப்ளானா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

    இந்நிலையில், இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால், வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவும் அபாயம் இருப்பதால், அதனை தடுப்பதற்கு வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    MORE
    GALLERIES

  • 69

    கொல்லி மலைக்கு ட்ரெக்கிங் போக ப்ளானா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

    இதற்கிடையில் தமிழகத்தின் சில வனப்பகுதியில் அவ்வப்போது காட்டுத்தீ பரவி பயமுறுத்திவருகிறது. இதனால், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கோடைக்காலம் முடியும் வரை, மலையேற்ற பயிற்சிக்கு வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 79

    கொல்லி மலைக்கு ட்ரெக்கிங் போக ப்ளானா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

    இந்த மலையேறும் பயிற்சிக்கான தடையானது 3 மாத காலத்திற்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. யாரேனும் அனுமதியின்றி மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 89

    கொல்லி மலைக்கு ட்ரெக்கிங் போக ப்ளானா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

    எனவே, இப்போதைக்கு கொல்லிமலையில் டிரக்கிங் செல்லும் திட்டத்தை கைவிட்டுவிடுங்கள். எனவே, பாதுகாப்பு நிறைந்த தடை விதிக்கப்படாத மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா சென்று என்ஜாய் பண்ணுங்க. சில மாதங்களுக்கு டிரக்கிங் செல்வதை தவிர்த்துவிடுங்கள்.

    MORE
    GALLERIES

  • 99

    கொல்லி மலைக்கு ட்ரெக்கிங் போக ப்ளானா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

    கடந்த 2018ஆம் ஆண்டு தேனி மாவட்டம் குரங்கணியில் டிரக்கிங்கில் ஈடுபட்ட இளைஞர்கள் பலர் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, கோடைக்காலங்களில் டிரக்கிங் பயிற்சிக்கு வனத்துறை அனுமதி அளிப்பதில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES