1919ஆம் ஆண்டு, கொல்லிமலை பகுதகளில் விஷக்காய்ச்சல் பரவியது. விஷக்காய்ச்சளால் பாதிக்கப்பட்ட மக்களை மலைமேலுள்ள பாறையில் போட்டு வந்து விடுவார்களாம். நோய் நீங்கி உயிரோடு இருந்தால் மீண்டும் அவர்கள் கிராமத்திற்குள் அனுமதிக்கப்படுவார்களாம். அதனாலேயே அந்த பகுதி சீக்கு பாறை (SICK MOUNT) என்று இன்றளவும் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. நோயால் பாதிக்கட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து ஜெசிமென் காப்பாற்றினார்.
அத்தோடு மட்டும் நில்லாமல், கொல்லிமலை பகுதியில் நடந்த குழந்தை திருமண முறைக்கு எதிராகவும் போடினார். குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட, சிறுமிகளையும் ஜெசிமென்-ஈவ்லி தம்பதியினர் பாதுகாத்து வளர்த்தனர். அவ்வாறு பாதிப்புக்கு உள்ளான சிறுமிகளுக்கும், நோய்பாதித்த குழந்தைகளுக்கும் சிகிச்சை அளித்து விடுதியி அமைத்து பராமரித்தனர்.
கொல்லிமலையில் ஜெசிமென் பள்ளிகளையும் கட்டினார். சிறுவர்களுக்கு கல்வி அறிவும், தோட்டக்கலை, பாய் முடைதல், நெசவு, பட்டுபூச்சி வளர்ப்பு, தச்சு போன்றவைகளும் கற்றுதரபட்டன. அப்பகுதி மக்களின் விவசாய முன்னேற்றத்திற்கும் துணைபுரிந்தார். கொல்லிமலையின் பல பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்தவும் துணைபுரிந்தார்.
இந்நிலையில் ஜெசிமென் பிராண்டு கறுப்பு நீர் காய்ச்சல் (Black Water Fever) என்னும் வினோத நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தும் பலனின்றி, 1929ஆம் ஆண்டு தனது 44ஆவது வயதில் கொல்லிமலையிலேயே உயிரிழந்தார். 17 ஆண்டுகள் கொல்லிமலையிலேய வாழ்ந்த அவரின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.
ஜெசிமென் பிராண்டு வாழந்த மரத்தால் ஆன பங்களாவை இன்றும் பார்க்கலாம். அங்கே அவர்கள் பயன்படுத்திய கட்டில், சமையலறை மற்றும் பிற பொருட்களையும் பார்க்க முடியும். கொல்லிமலை மக்களின் முன்னேற்றத்திற்கு உதவிய ஜெசிமென் பிராண்டுடின் நினைவுகளை சொல்லும் பல்வேறு அடையாளங்கள் இன்றும் இருக்கின்றன. அந்த வகையில் மர பங்களாவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.