நடிகர் விஜய் பெயரில் திருக்கடையூர் கோவிலில் சிறப்பு பூஜை செய்த எஸ்.ஏ. சந்திரசேகர் - படங்கள்
S.A. Chandra Sekar at Thirukadaiyur | 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிரகடேஸ்வரர் கோவிலில் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்து வழிபாடு. நடிகர் விஜய் பெயரில் அர்ச்சனை செய்தார்.. படங்கள்: கிருஷ்ணகுமார், மயிலாடுதுறை
திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ஷோபா சந்திரசேகர் ஆகியோர் திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிரகடேஸ்வரர் கோவிலில் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்து வழிபாடு செய்தனர்.
2/ 9
நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நடந்து வந்த நிலையில் இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
3/ 9
தந்தை மகன் இருவருக்கு நடுவிலும் பனிப்போர் சென்றுகொண்டிருப்பதாக தமிழ்திரையுலகு வட்டாரத்தில் ஒரு பேச்சு நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. விஜய்யின் அரசியல் ஈடுபாடு போன்ற சில நிகழ்வுகளால் இருவருக்கும் நடுவே மனக்கசப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
4/ 9
இந்நிலையில் கோவில் வழிபாட்டின்போது தனது மகன் விஜய் பெயரில் சிறப்பு பூஜை செய்திருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகர். மேலும் அவர்களின் ஆயுள் விருத்திக்காகவும் பூஜை செய்துள்ளனர்.
5/ 9
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரரும், காலசம்கார மூர்த்தியும் அருள்பாலித்து வருகிறார்கள்.
6/ 9
சிவன், எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு என்று வரம் அளித்த தலமாக விளங்குவதால் பக்தர்கள் தங்கள் ஆயுள் விருத்தி வேண்டி சஷ்டியப்தபூர்த்தி, (அறுபதாம் கல்யாணம்) செய்வது சிறப்பம்சமாகும்.
7/ 9
மேலும் ஆயுள் விருத்திக்காக உக்ரரதசாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் கனகாபிஷேகம் உள்ளிட்ட திருமண பூஜைகள் செய்யப்படுகின்றன.இந்த நிலையில் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கோவிலுக்கு வந்து சிறப்பு ஹோமம் செய்து கொண்டார்.
8/ 9
எஸ். ஏ. சந்திரசேகர் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு ஆயுள் விருத்திக்காக சதாபிஷேக ஹோமம் செய்து வழிபாடு செய்தனர். தனது மகன் நடிகர் விஜய் பெயரில் அர்ச்சனையும் செய்தார்.
9/ 9
தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்தார்.மேலும் அங்கிருந்த மக்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
19