பார்வதி மயில்ரூபம் எடுத்து மயிலாடுதுறை நகரில் காவேரி நதியின் வெகு காலம் தவம் செய்து இருந்தார். இதைத் அறிந்த சிவன் ஆண் மயில் உருவெடுத்து பார்வதியை சந்தித்து பெண் மயிலான பார்வதியுடன் ஆடி பார்வதிக்கு சாப விமோசனம் தந்தார். சிவனும் பார்வதியும் மயில் உருவத்துடன் ஆடியதால் மயிலாடிய காவிரித்துறை என்று இத்தலம் பெயர் பெற்றது.