கோவிலின் கருவறையில் மூலவர் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் கையில் ஆயிதத்துடன் காட்சியளிக்கிறார். இந்த கோவில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த தலமாகும். திருமால் ஒரே இடத்தில் ராமராகவும், கிருஷ்ணராகவும் காட்சி தரும் ஒரே தலம் இதுதான் என்று சொல்லப்படுகிறது. ராமர் சங்கு-சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.