மே 4ஆம் தேதி வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர், விண்ணதிரும் அதிர்வேட்டுகள் முழுங்க, மலையிலிருந்து பல்லாக்கில் புறப்பட்டு வருவார். மதுரைக்குள் வரும் அழகரை மூன்று மாவடி அருகே சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி வைத்து பல்லாயிரக் கணக்கான மக்கள் எதிர்சேவை செய்வார்கள். அப்போது, கள்ளழகர் போல வேடமிட்டு வரும் பக்தர்கள் நீரை பீய்ச்சியடித்து உற்சாகத்தில் திளைப்பார்கள்.