ஹோம் » போடோகல்லெரி » மதுரை » "அம்மாவாக உணர்கிறேன்" ஜல்லிக்கட்டு காளைகளால் தாய் ஆனேன்.. திருநங்கை கீர்த்தனா!

"அம்மாவாக உணர்கிறேன்" ஜல்லிக்கட்டு காளைகளால் தாய் ஆனேன்.. திருநங்கை கீர்த்தனா!

Madurai jallikattu Transgender keerthana | இந்த ஆண்டும் எனது குழந்தைகளை எனக்கு வெற்றியே தருவார்கள் - திருநங்கை கீர்த்தனா.

 • Local18
 • 18

  "அம்மாவாக உணர்கிறேன்" ஜல்லிக்கட்டு காளைகளால் தாய் ஆனேன்.. திருநங்கை கீர்த்தனா!

  பொட்டபனையூர் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை கீர்த்தனா. இப்போது உள்ள திருநங்கை எத்தனையோ பேர் பல்வேறு துறைகளில் சாதித்துக் கொண்டு இருக்கும் வேலையில் இவர் ஜல்லிக்கட்டில் களம் இறங்கியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 28

  "அம்மாவாக உணர்கிறேன்" ஜல்லிக்கட்டு காளைகளால் தாய் ஆனேன்.. திருநங்கை கீர்த்தனா!

  சின்ன முத்தையா, பெரிய முத்தையா,கருடன், செவ்வாழை, ருத்ரன், வீரா போன்ற ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இந்தக் காளைகள் தான் எனது குழந்தை எனவும் இக்குழந்தைகளை அன்போடு வளர்க்கும் போது எனது தாய்மையை உணர்கிறேன் என்கிறார் கீர்த்தனா.

  MORE
  GALLERIES

 • 38

  "அம்மாவாக உணர்கிறேன்" ஜல்லிக்கட்டு காளைகளால் தாய் ஆனேன்.. திருநங்கை கீர்த்தனா!

  ஒரு குழந்தை தனது பெற்றோருக்கு எப்படி பேரும் புகழையும் வாங்கி கொடுக்குமோ அதைப்போலவே என் குழந்தைகள் எனக்கு 'ஜல்லிக்கட்டு திருநங்கை கீர்த்தனா' என்ற பெயரையும் புகழையும் பழச்சுவை போல் இனிக்க இனிக்க கொடுக்கிறார்கள் என்றார்.

  MORE
  GALLERIES

 • 48

  "அம்மாவாக உணர்கிறேன்" ஜல்லிக்கட்டு காளைகளால் தாய் ஆனேன்.. திருநங்கை கீர்த்தனா!

  இந்த ஆண்டும் இனிக்கச் செய்ய எனது குழந்தைகள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு நடைபெறும் ஒரு மாதத்திற்கு முன்பு இந்த பயிற்சிகள் அனைத்தையும் எனது தோழிகள் மற்றும் என்னுடைய பசங்க கொடுத்து வருகிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 58

  "அம்மாவாக உணர்கிறேன்" ஜல்லிக்கட்டு காளைகளால் தாய் ஆனேன்.. திருநங்கை கீர்த்தனா!

  என்னுடைய பசங்க தான் ஜல்லிக்கட்டு பயிற்சி முதல் ஜல்லிக்கட்டு நடைபெறும் வரை எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கின்றார்கள் என தெரிவிக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 68

  "அம்மாவாக உணர்கிறேன்" ஜல்லிக்கட்டு காளைகளால் தாய் ஆனேன்.. திருநங்கை கீர்த்தனா!

  இந்த ஆண்டு எனது குழந்தைகள் அனைத்தையும் களத்தில் இறக்குகிறேன். புதிதாக இந்த ஆண்டு புளி்குளம் ரகத்தைச் சேர்ந்த செவ்வாழையை ஒரே ஒரு வாடிவாசலில் மட்டும் இறக்குகிறேன். எனவே அவர் மீது மட்டும் ஆர்வம் சற்று அதிகமாக உள்ளது என கூறினார்.

  MORE
  GALLERIES

 • 78

  "அம்மாவாக உணர்கிறேன்" ஜல்லிக்கட்டு காளைகளால் தாய் ஆனேன்.. திருநங்கை கீர்த்தனா!

  மேலும் ஜல்லிக்கட்டு அன்று தனது மாடுகளை அலங்கரித்து இழுத்துச் செல்லும் கயிறு முதற்கொண்டு வாடிவாசல் அருவாள் வரை அவர்களே தனது குழந்தைகளுக்கென தனித்துவமாக தயார் செய்து கொள்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 88

  "அம்மாவாக உணர்கிறேன்" ஜல்லிக்கட்டு காளைகளால் தாய் ஆனேன்.. திருநங்கை கீர்த்தனா!

  ஜல்லிக்கட்டில் களம் இறங்க தனது குழந்தைகளை தயார் படுத்திக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு திருநங்கை கீர்த்தனா , இந்த ஆண்டும் எனது குழந்தைகள் வெற்றியே தருவார்கள் என்றும், அவர்களை மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைப்பேன் என்றும் 'வாடிவாசல் அரிவாளுடன் கம்பீரமாக' கூறினார்.

  MORE
  GALLERIES