மதுரை பண்ணை வீட்டில் எளிமையாக பிறந்தநாளை கொண்டாடிய மு.க.அழகிரி!
M.K.Azhagiri Birthday : மதுரை சோழவந்தான் அருகே தென்கரை பன்னை வீட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது பிறந்த நாளை ஆதரவாளர்களுடன் எளிமையாக கொண்டாடினார்.
மு.க.அழகிரி தீவிர அரசியலில் இருந்தபோது அவரது பிறந்த நாளில் தனது ஆதரவாளர்களை சந்திப்பது, ஆதரவாளர்களின் வாழ்த்துகளை ஏற்று கொள்வது என பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெறும்.
2/ 6
மு.க.அழகரி தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ள சூழலில், தனது பிறந்த நாளின் தேவையில்லாத ஆடம்பரத்தை தவிர்த்து வருகிறார்.
3/ 6
மேலும் குடும்பத்துடன் தனது பிறந்த நாள் அன்று தனது மதுரை சோழவந்தான் அருகே உள்ள தனது பண்ணை வீட்டிற்கு செல்வது வழக்கம்.
4/ 6
அந்தவகையில், இன்று (ஜனவரி 30ம் தேதி) மு.க.அழகரியின் பிறந்த நாள் என்பதால் அவரது குடும்பத்துடன் தனது பண்ணை வீட்டிற்கு சென்றார்.
5/ 6
அங்கு தனது ஆதரவாளர்கள் விருப்பப்படி பண்ணை வீட்டில் மிகவும் எளிமையாக கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
6/ 6
அப்போது அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு உதவிகளை வழங்கினார்.
16