யில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் விரகனூர் பகுதியில் இருக்கிறது பல்வேறு சிறப்புகளை கொண்டதாக விளங்கும் சாமநத்தம் கண்மாய். அவனியாபுரம் பகுதி விளைநிலங்களுக்கு இந்த கண்மாய் தண்ணீர் முக்கிய ஆதாரமாக திகழ்ந்தது.
2/ 8
இந்த சாமநத்தம் கண்மாயானது, மதுரையில் வருடம் முழுவதும் பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்யக்கூடிய நீர்நிலையாக இருந்து வருகிறது. இங்கே உள்ளூர் பறவைகள் மட்டுமல்லாது வெளிநாட்டு பறவைகளும் வலசை வருகின்றன.
3/ 8
இந்த பகுதியின் சுற்றுச்சூழலும் பறவைகள் உண்ண உணவாக இங்கே இருக்கும் தாவரங்கள், மீன்கள், பூச்சிகள் என பல்லுயிர்ச் சூழல் இருப்பதை நம்மால் பார்க்க முடியும். இவை வலசை வரும் பறவைகளுக்கும் உள்ளூர் பறவைகள் அதிக அளவில் காணப்படுவதற்கும் முக்கிய காரணமாக இருக்கின்றன.
4/ 8
இந்த பகுதிக்கு வரும்போதே பல வித பறவை இனங்களின் வேறு பட்ட ஓசைகளை கேட்க முடியும். பறவைகள் கீரிச்சிடும் ஒலிகளும், குஞ்சுகளின் இனிமையான ஒலிகளும், அபாய சத்தங்களும் என ஓர் இசைக் கூடத்தில் நுழைந்தது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும்.
5/ 8
இங்கே பெரும் புள்ளி கழுகு, இந்திய பெரும் புள்ளி கழுகு, பூஞ்சை கழுகு போன்ற கழுகு இனங்களை பார்க்க முடியும். மேலும் பல நாரையினங்களையும் இந்த பகுதியில் பார்க்க முடியும். இங்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 160 வகையான பறவை இனங்கள் வலசை வருவது கண்டறியப்பட்டுள்ளது.
6/ 8
அதன்படி, பிளம்மிங்கோ பறவைகள், மத்திய ஆசியா மற்றம் ஐரோப்பாவை சேர்ந்த காட்டு வாத்துகள் இந்த கண்மாய்க்கு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. அன்றில் பறவைகள் ஆயிரக் கணக்கில் காணப்படுகின்றன.
7/ 8
பல பறவைகள் சரணாலயங்களில் ஒரு வருடத்தில் 5 மாதம் காலம் மட்டுமே பறவைகள் வந்து செல்வதைப் பார்க்க முடியும், ஆனால் இந்த சாமநத்தம் கண்மாயில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் பறவைகள் வந்து செல்வதாக பறவை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
8/ 8
இதனால், இந்த கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றும், குப்பை இன்றி பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப் பெற்று வருகின்றன.
18
கிரீச் கிரீச்... ஆரவாரம்... பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கும் மதுரை சாமநத்தம் கண்மாய்!