மீனாட்சியம்மன் கோயிலின் தெப்பத்திருவிழா பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்த விழாவின் துவக்கமாக, கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் 11 மணி அளவில் சிவச்சியார் வேத மந்திரம் முழங்க கொடியேற்றப்பட்டது.
2/ 4
இந்நிகழ்வின் போது மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் சிம்ம வாகனத்தில் கொடிமரம் முன்பாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
3/ 4
12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமியும் அம்மனும் தங்கச் சப்பரம், தங்ககுதிரை உள்ளிட்டப் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
4/ 4
12ம் நாள் பிப்ரவரி 4ம் தேதியன்று மாரியம்மன் கோயிலருகேயுள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவை காண வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக தெப்பக்குளம் அருகேயுள்ள ஆயிரங்கால் மண்டபம் அன்று ஒருநாள் திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.