மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி சப்பர வீதி உலா... திரளான பக்தர்கள் தரிசனம்!
madurai meenakshi Amman | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழாவில் உயிர்களின் பசிப்பிணி தீர்ப்பதற்காக வீதிகளில் இரைக்கப்பட்ட அரிசிகளை சேகரித்த பக்தர்கள்.
மீனாட்சி அம்மன் கோயிலின் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான அஷ்டமி சப்பர திருவிழா துவங்கியது. மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
2/ 8
சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், சப்பரங்களில் எழுந்தருளியுள்ளனர்.
3/ 8
சப்பர உலா கீழமாசி வீதியில் இருந்து யானைக்கல், கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழ மாரட் வீதி, விளக்குத்தூண் வழியாக மீண்டும் கீழமாசி வீதியை அடையும்.
4/ 8
மீனாட்சி அம்மன் சப்பரத்தை பெண்கள் மட்டும் கூடி பக்தி பரவசம் முழங்க இழுத்து செல்கின்றனர்.
5/ 8
இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் இரைப்பர்.
6/ 8
பக்தர்கள், கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை சேகரித்து, வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் பசிப்பிணி ஒழியும் என்பது நம்பிக்கை.