உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கடந்த 2 நாட்களும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் ஒவ்வொரு வாகனத்தில் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் மே 2ஆம் தேதியும், தேரோட்ட வைபவம் மே 3ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து உலக புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மே 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி மதுரையில் மே 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.