யில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றுதான் ஒத்தக்கடை நரசிங்கமங்கலம் பகுதியில் அமைந்துள்ள யானைமலை. இப்பகுதிக்கு செல்லும் வழியில் தான் சமணர்கள் பற்றிய சிற்பங்கள் இருக்கிறது.
2/ 11
இச்சிற்பங்கள் மலையின் ஒரு பகுதியில் அமைந்திருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட படிகளைக் கடந்து தான் சமண சிற்பங்களை காண முடியும்.
3/ 11
இச்சிற்பங்களை காண்பதற்கு என பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் வருவதினால் சமணர்களின் வரலாற்றை எடுத்துரைக்கவே ரவிச்சந்திரன் என்ற வழிகாட்டி ஒருவர் உள்ளார்.
4/ 11
சமண சிற்பங்கள் குறித்து பேசிய வழிகாட்டி ரவிச்சந்திரன், ‘உலகிலேயே ஒரே கல்லினால் ஆன பெரிய மலை இந்த யானை மலைத்தான்.
5/ 11
இந்த மலையில் இயற்கையாகவே அமைந்த குகையின் மேல்புற முகப்பில் சமண சிற்பங்கள் அமைந்துள்ளது. இங்குள்ள சமண சிற்பங்கள் சுமார் 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. இங்குள்ள சிலைகள் சமணர்களின் புராணக் கதைகளை விளக்குகின்றன.
6/ 11
பார்ப்பசுவாமிநாதன் சிலையில் அவருக்கு மேலே தர்ணேந்திரன் என்பவன் ஐந்து தலைப்பாம்பாக மாறி குடைபிடித்துக் கொண்டிருக்கிறது.
7/ 11
தர்ணேந்திரனின் மனைவியாகிய பத்மாவதி என்ற இயக்கி பார்சுவநாதருக்கு அருகில் ஒரு குச்சியைப் பிடித்திருப்பதுபோல் காணப்படுகிறது.
8/ 11
கமடன் என்ற அசுரன் ஒருவன் பார்சுவநாதர் மேல் கல்லைத் தூக்கி போட வருவதுபோலவும், அவனிடமிருந்து காப்பது போல தர்ணேந்திரன் சிற்பமும் காணப்படுகிறது என இங்கு உள்ள ஒவ்வொரு சிற்பத்திற்கும் வரலாறு உண்டு.
9/ 11
இங்குள்ள சிற்பங்கள் அனைத்தும் பல நூற்றாண்டை கடந்தும் கலைநயமிக்கவையாக இருக்கின்றது.
10/ 11
மேலும் இங்கு உள்ள குகையில் தான் சமணர்கள் கல்வியை போதித்ததாகவும், குகையில் உள்ள பாறையில் உள்ள குழியில் தான் பல்வேறு வகையான மூலிகைகளைக் கொண்டு மருந்துகள் தயாரித்ததாகவும் கூறினார்.