தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி சார்பில் "தேசிய அளவிலான நாட்டின நாய்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்" ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வக்குமார், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.