மீனாட்சியம்மன் கோவில் 45 ஏக்கர் (180,000 சதுர மீட்டர்கள்) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கோவிலாகும். இது 8 கோபுரங்களை கொண்டதாக உள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள இரட்டை கோபுரத்தின் ஒன்றில் மீனாட்சியம்மனும், மற்றொன்று சுந்தரேஸ்வரரரும் வீற்றுள்ளனர்.
மதுரையின் பிரபல ENT (காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்) மருத்துவர் காமேஸ்வரன் இந்த ஆயிரங்கால் மண்டபத்தை நவீன கருவிகளுடன் ஆராய்ந்தார். அப்போது, இந்த மண்டபத்தில் ஒலியைக் கட்டுப்படுத்தும் அற்புத கட்டிட உத்தி பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.உலக மக்களை தன்னே நோக்கி ஈர்க்கும் பேரழகை கொண்டதாக உள்ளது.