இங்கிருக்கும் குன்றுகளில் சமணர்கால குகைகள், சமணப்படுகைகள், மகா வீரர் புடைப்புச் சிற்பம் என பல வரலாற்று சின்னங்களைப் பார்க்கலாம். இதேபோல இன்றும் மக்கள் பக்தியோடு வணங்கும் சில கோவில்களையும் பார்க்க முடியும். பண்டை தமிழர்களின் வாழவியல் வளச்சிப் போக்கின் ஆதாரங்ளையும் காணமுடியும் அந்த வகையில் இந்த பகுதி மதுரையில் பலராலும் அறியப்படதா முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றாக உள்ளது.
இதேபோல இங்கே, பல்லவ மன்னர்களின் அற்புத படைப்பான குடைவரைக் கோவில்களை பார்க்க முடியும். இந்த குடைவரை கோவல்கள் பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தவை என்று சொல்லப்படுகின்றன. அந்த வகையில் இந்த பகுதி ஓர் வரலாற்று சுற்றுலா தலமாகவும் இருந்து வருகிறது. வாழும் மூதூர் என்று போற்றப்படும் மதுரைக்கு இதுவும் பெருமை சேர்க்கும் பகுதியாக இருந்து வருகிறது.
இந்த பகுதியல் பூட்டட் ஈகிள், பிரவுன் பிஸ் ஈகில், தேன் பருந்து மற்றும் பல அரியவகை பறவைகள், வெளிநாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக வரும் பறவைகள் போன்ற ஏராளமான பறவைகளையும், அவை எழுப்பும் இனிமையான பலவித குரல்களையும் கண்டுகளித்து கேட்டு ரசிக்க முடியும். இந்த பகுதி மதுரையில் ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற சிறந்த இடமாகும்.