மேஷம்:
இன்றைக்கு உங்களின் வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணியிடத்தில் பொருளாதாரப் பணிகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழல் உருவாகும். அக்கம்- பக்கம் இருப்பவர்களின் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்கள் கூறுவதைத் தவிர்ப்பது பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையும். தொழிலபதிபர்களுக்கு தங்களுடைய தொழிலில் லாபம் கிடைககும் நாள் இன்று. அலுவலகத்தில் உங்களின் பணி வழக்கத்தை விட சிறப்பானதாக அமையும். மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் உங்களது சந்திப்பு நடைபெறும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்: பைரவர் கோயிலில் இனிப்புகள் வழங்கவும்.
ரிஷபம்:
இன்றைக்கு சிக்கல்கள் விலகும் நாள் என்றாலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் அதிக ஆர்வத்தைத் தவிர்க்கவும். எந்தவொரு கடன் பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டும். பெரியவர்களை அனுசரித்து செல்லவும். தொழில் வியாபாரம் உங்களுக்கு சாதகமாக அமையும். தேவையற்ற விவாதம் மற்றும் சர்ச்சையைத் தவிர்க்கவும். தொழில் முயற்சிகள் வேகம் பெறும். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வரவுகளின் மூலம் உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருள்களை நீங்கள் சேர்க்கும் நிலை உருவாகும்.
பரிகாரம்: துர்க்கை கோவிலில் துர்கா மந்திரத்தை உச்சரித்து வழிபடவும்.
மிதுனம்:
பணியிடத்தில் வெற்றிகள் கிடைக்கும் நாளாக அமையும். இன்றைக்கு கிடைப்பதை வைத்து சந்தோஷமாக இருக்கவும். கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். இல்லையென்றால் திருப்பிச் செலுத்துவது கடினமாகிவிடும். உங்களுக்குப் பின்னால் நடக்கும் சதி தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சுபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாயின் ஆரோக்கியம் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும் நாள் இன்று.
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து, விநாயக மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
கடகம்:
முயற்சிக்கு ஏற்ப மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் நாள் இன்று. பொருளாதாரத் தேவைக்காக செலவு செய்யும் சூழல் ஏற்படும். கட்டிடம். வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். மற்றவர்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடனிருப்பவர்கள் கூறும் கருத்துகளில் உள்ள உண்மையை அறிந்து முடிவு எடுப்பது நல்லது. ஆடம்பரமான பொருள்களின் மீது உங்களின் ஈர்ப்பு அதிகரிக்கும்.
பரிகாரம்: கிருஷ்ணருக்கு சர்க்கரை மிட்டாய் பிரசாதம் வழங்கவும்.
சிம்மம் :
இன்றைக்கு எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். பொருளாதார வணிகத்துறையில் சிறந்த முயற்சியை எடுப்பது நல்லது. ஆபத்தான செயல்களில் ஆர்வம் காட்டாதீர்கள். பங்குச்சந்தை மற்றும் வணிகத்தில் முதலீடு செய்திருந்தால் நஷ்டம் ஏற்படும். கலைத்துறையில் சிறந்து விளங்குவீர்கள். பெரிய தொழில் வவ்லுநர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும் நாள் இன்று. சமூக வலைத்தளம் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும்.
பரிகாரம்: செல்லப் பிராணிகளுக்கு உணவுகள் வழங்கவும்.
கன்னி:
உங்களது திறமையின் அடிப்படையில் இன்றைய பொருளாதார நிலை மேம்படும். தேவையில்லாத முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் நஷ்டம் உண்டாகும். புத்திசாலித்தனமாக பண பரிவத்தனையை மேற்கொள்ளவும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும் நாளாக இன்றைக்கு அமையும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும்.
பரிகாரம்: அனுமன் மந்திரத்தை உச்சரித்து வழிபடவும்.
துலாம்:
நீங்கள் உத்தியோகத்தில் இருந்தால் நிச்சயம் சில சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும். வேலையில் அதிக நேரத்தை செலவிட்டு நாளை பயனுள்ளதாக மாற்றுங்கள். தொழிலதிபர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள் இன்று. கால்நடை தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதயகரமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
பரிகாரம்: ஆலமரத்தடியில் நெய் தீபம் ஏற்றவும்.
விருச்சிகம்:
பொருளாதார விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும. கொடுக்கல் – வாங்கல்களில் தெளிவு அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் தொழில் விஷயங்களில் கண்ணியத்தைக் கடைப்பிடியுங்கள். நிச்சயம் வியாபாரம் செழிக்கும். தொழில், வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும்.
பரிகாரம்: சுந்தரகாண்டம் அல்லது அனுமன் மந்திரத்தை 7 முறை பாராயணம் செய்யவும்.
தனுசு:
நீண்ட கால நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிப்பீர்கள். இதனால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் வல்லுநர்களின் ஆதரவு உங்களை மேன்மை அடைய செய்யும். தொழிலில் நிலவி வந்த தடைகள் தனாக விலகும். இழந்த பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய இலக்கினை நிர்ணயம் செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் வல்லுநர்களின் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்: சிறைபிடிக்கப்பட்ட பறவைகளை பறக்க விடுங்கள்.
மகரம்:
தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் நாள் இன்று. தொழிலதிபர்கள் செல்வாக்குகள் இருப்பார்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் மேம்படுவதோடு புகழும் மரியாதையும் அதிகரிக்கும். இன்றைய சூழல் உங்களை உற்சாகமடையச் செய்யும். எண்ணிய திட்டங்கள் விரைவில் நிறைவேறும்.
பரிகாரம்: விநாயகருக்கு லட்டுகளை படையுங்கள்.
கும்பம்:
அலுவலகத்தில் பொறுப்புடன் நடந்துகொள்வதன் மூலம், உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தை மேம்படுத்த முடியும். வரவு மற்றும் செலவுகளை சமநிலையுடன் வைத்திருக்கவும். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். குழந்தைகளின் வழியில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நண்பர்கள் வழியில் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைவதற்கான ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய இலக்குகள் பிறக்கும்.
பரிகாரம்: குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.
மீனம்:
தொழில் சார்ந்த விஷயங்களை இன்றைக்கு நிலுவையில் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். நெருங்கியவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவது உங்களது வாழ்க்கையில் வெற்றிக்கு வழியாக அமையும். செலவுகள் மற்றும் பட்ஜெட்டில் கவனம் செலுத்துங்கள். வணிக வியாபாரத்தில் விழிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தனவரவுகளில் இழுபறியான சூழ்நிலைகள் அமையும். இனம்புரியாத சில கனவுகளின் மூலம் குழப்பம் உண்டாகும்.
பரிகாரம்: தாய்க்கு இனிப்பு வழங்குங்கள்.