ஹோம் » போடோகல்லெரி » Breaking and Live Updates » வீட்டு சாப்பாடு மட்டும் தான்... 5 மாதங்களில் 40 கிலோ வரை எடையை குறைத்த மும்பை பெண்..!

வீட்டு சாப்பாடு மட்டும் தான்... 5 மாதங்களில் 40 கிலோ வரை எடையை குறைத்த மும்பை பெண்..!

உடல் எடையைக்குறைப்பதற்கு எளிமையான முறையைக் கற்றுக்கொடுத்துள்ளார் ரிஹானா குரேஷி. 3 வேளையும் நன்றாக சாப்பிட வேண்டும் என்றும் கடைகளில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 • 16

  வீட்டு சாப்பாடு மட்டும் தான்... 5 மாதங்களில் 40 கிலோ வரை எடையை குறைத்த மும்பை பெண்..!

  இன்றைக்கு உள்ள பெரும்பாலான மக்கள் உடல் ஆரோக்கியத்தில் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை. கடைகளில் தங்களுக்குப் பிடித்த உணவுகள், நொறுக்குத்தீனிகள் அனைத்தையும் சாப்பிட்டு விட்டு உடல் எடை அதிகரித்து விட்டதே? குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என கவலையோடு இணையத்தைத் தேடுகின்றனர். உடல் எடை அதிகரிப்பது என்பது நம்மை குண்டாக காட்டுவதோடு மட்டுமில்லாமல் மாரடைப்பு போன்ற பல உடல் நல பிரச்சனைகளையும் நமக்கு ஏற்படுத்துகிறது.

  MORE
  GALLERIES

 • 26

  வீட்டு சாப்பாடு மட்டும் தான்... 5 மாதங்களில் 40 கிலோ வரை எடையை குறைத்த மும்பை பெண்..!

  இதனால் தான் மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் ஆலோசனை முதலில் எப்படியாவது உடல் எடையைக்குறைக்க முயற்சி செய்யுங்கள் என்பது தான். இப்படி தான் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக 108 கிலோ உடல் எடையுடன் இருந்துள்ளார். அதிக உடல் பருமனால் எந்த வேலையையும் செய்ய முடியாத சூழலில் எடையைக் குறைக்க வேண்டும் என முயற்சி எடுத்துள்ளார். அப்படி என்ன செய்தார்? என்பது குறித்து நாமும் அறிந்துக் கொள்வோம்..

  MORE
  GALLERIES

 • 36

  வீட்டு சாப்பாடு மட்டும் தான்... 5 மாதங்களில் 40 கிலோ வரை எடையை குறைத்த மும்பை பெண்..!

  108 கிலோ எடைக்குறைத்த மும்பையைச் சேர்ந்த பெண் : மும்பையை சேர்ந்த ஷாயிஸ்தா முஸ்தபா என்ற பெண்ணின் உடல் எடையானது 108 கிலோ வரை இருந்துள்ளது. இதனால் பலரின் கிண்டல் கேளிகளுக்கு ஆளாவதோடு பல உடல் பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார். அப்போது தான் இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்றால், உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என முடிவெடுத்துள்ளார். இதற்காக ஊட்டச்சத்து நிபுணரான ரிஹானா குரேஷியை, ஷாயிஸ்தா அணுகி என்ன செய்யலாம் என கேட்டிருக்கிறார். இவரிடம் கவுன்சிலிங் கேட்டது தான் ஷாயிஸ்தா முஸ்தபாவின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.

  MORE
  GALLERIES

 • 46

  வீட்டு சாப்பாடு மட்டும் தான்... 5 மாதங்களில் 40 கிலோ வரை எடையை குறைத்த மும்பை பெண்..!

  ஆரோக்கிய உணவு மற்றும் உடற்பயிற்சி முறை: உடல் எடையைக்குறைப்பதற்கு எளிமையான முறையைக் கற்றுக்கொடுத்துள்ளார் ரிஹானா குரேஷி. 3 வேளையும் நன்றாக சாப்பிட வேண்டும் என்றும் கடைகளில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வீட்டில் சமைத்த உணவுகள் எதுவாக இருந்தாலும் சாப்பிடலாம் என தெரிவித்துள்ளதோடு, வாரத்திற்கு 3 முறை வலிமை பயிற்சியும், இதேப் போன்று வாரத்தின் அடுத்த 3 நாள்களுக்கு கார்டியோ பயிற்சியும் செய்ய பரிந்துரைத்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து எடையானது விரைவாக குறையும் எனவும் தெரிவித்துள்ளார். இதன்படி தான், ஷாயிஸ்தா முஸ்தபாவும் மேற்கொண்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 56

  வீட்டு சாப்பாடு மட்டும் தான்... 5 மாதங்களில் 40 கிலோ வரை எடையை குறைத்த மும்பை பெண்..!

  உடற்தகுதி ரகசியங்களைப் பின்பற்றுதல் : உடல் எடையைக் கட்டுக்குள் வைத்ததோடு ஆரோக்கியமாக இருப்பதற்காக நம்முடைய முன்னோர்கள் எவ்வித ஆடம்பரமான விஷயங்களைச் செய்யவில்லை. எனவே இதுப்போன்று தான் உடல் ஆரோக்கியத்துடன் எடையைக்குறைக்க வேண்டும் என்று நினைத்தால், நல்ல உணவு மற்றும் உடல் உழைப்பு அவசியம் என உடல் எடைக் குறைப்பு முயற்சியின் வாயிலாக கற்றுக்கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 66

  வீட்டு சாப்பாடு மட்டும் தான்... 5 மாதங்களில் 40 கிலோ வரை எடையை குறைத்த மும்பை பெண்..!

  இதனையடுத்து அதிகரித்துள்ள எடையைக்குறைப்பதற்கு ஷாயிஸ்தா வெளி உணவு சாப்பிடுவதை நிறுத்தியுள்ளார். பின்னர் எளிய முறையில் வீட்டு உணவை மட்டும் சுவையாக செய்து சாப்பிடத் தொடங்கியதன் பலன் தான், 5 மாதங்களில் சுமார் 40 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார். தற்போது 108 கிலோ உடல் எடையிலிருந்து 68 கிலோவாக உள்ளது தன்னுடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றி எனவும் பெருமிதம் கொள்கிறார் ஷாயிஸ்தா.

  MORE
  GALLERIES