அதன் பிறகு ஒரு சரிவு, 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா. பிறகு எய்டன் மார்க்ரம் (33 பந்து 48 ரன் 1 பவுண்டரி 2 சிக்ஸ்), டேவிட் மில்லர் (26 ரன் 15 பந்து, 2 பவுண்டரி 1 சிக்ஸ்) இணைந்து 35 பந்துகளில் 65 ரன்கள் சாத்தினர். இதனையடுத்து கடைசி 5 ஓவர்களில் ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் வர தென் ஆப்பிரிக்கா 163/5 என்று ஒரு டீசண்ட் டோட்டலை எடுத்தது.
சந்திமால் சிறப்பாக ஆடி தன் முந்தைய டி20 அதிகபட்ச ஸ்கோரான 58 ரன்களைக் கடந்து 66 ரன்கள் 54 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்கள் இதில் அடங்கும். ஏகப்பட்ட டாட்பால்கள் இலங்கையைக் காலி செய்ய கடைசியில் கொத்தாக விக்கெட்டுகளை இழக்க 28 ரன்கள் குறைவாக எடுத்து இலங்கை தோல்வி கண்டது, ஆட்ட நாயகனாக எய்டன் மார்க்ரம் தேர்வு செய்யப்பட்டார்.