25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 கிராம் எடையுள்ள இரண்டு தங்கப் பதக்கங்கள், நெக்லஸ், சேலை ஆகியவை திருப்பதி வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பஞ்சமி தீர்த்த மண்டபத்தில் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை அம்மன் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு உற்சவ ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.