ஆந்திராவில் கனமழை காரணமாக அங்கிருந்து வெங்காயம் வரவில்லை.பெங்களூரில் இருந்து வரும் வெங்காயம் மூட்டைக்கு 10 கிலோ அழுகிய விடுகிறது.நாசிக்கில் இருந்து வரும் வெங்காயம் 75 முதல் 85 ரூபாய்க்கு கூடுதல் விலைக்கு வருவதால் அதனை வாங்கி 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.60 ரூபாய்க்கு விற்ற பெல்லாரி வெங்காயம் 90 முதல் 100 ரூபாய் என விற்கப்படுகிறது. 40 ரூபாய்க்கு விற்ற மீடியம் வெங்காயம் 70 முதல் 80ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்த நிலையில் வெங்காயம் பதுக்கி வைக்கப்படுவதாகவும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கந்தசாமிக்கு புகார் வந்தது. இதன்படி பெரிய மார்க்கெட்டில் அவர் திடீர் ஆய்வு செய்தார்.கடைகளின் கிடங்குகளிலும் ஆய்வு செய்த அமைச்சர் வெங்காயத்தை பதுக்க கூடாது.கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என வியாபாரிகளை எச்சரித்தார்.