தொடர்ந்து சினிமாத்துறையில் உள்ளவர்கள் உட்பட பலரை அவதூராகப் பேசியும், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என தமிழ்நாடு காவல் துறையினருக்கு சவால் விட்ட வண்ணமும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து பட்டியலின மக்களை இழிவுப்படுத்தும் வகையில் அவர் பேசிய அந்த வீடியோ பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, நடிகை மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.