KKR vs RCB IPL 2021: கோலி படையை மோர்கன் படை கவிழ்த்தது எப்படி?
ஐபிஎல் 2021 டி20 போட்டியில் நேற்று விராட் கோலி தலைமை ஆர்சிபி அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆதிக்கம் செலுத்தி படு ஸ்டைலாக வெற்றி பெற்றது. அபுதாபியில் ஒருதலைபட்சமாக இந்தப் போட்டி முடிந்து விட்டது. கோலிக்கு ஏமாற்றம், இயான் மோர்கனுக்கோ பயங்கர குஷி. இது நடந்தது எப்படி?
ஆர்சிபி கேப்டன் விராட் கோலி டாஸில் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.
2/ 10
கேப்டன் விராட் கோலி 2வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா பந்தில் எல்.பி.ஆனார் ரிவியூவும் கைகொடுக்கவில்லை, கோலி 200வது ஐபிஎல் போட்டியில் ஏமாற்றம்.
3/ 10
கோலி எல்.பியை எதிர்த்து ரிவியூ செய்தார், ஆனால் பால் ட்ராக்கிங் தொழில்நுட்பம் அவர் அவுட் என்றது.
4/ 10
புதிர் ஸ்பின்னரான தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 4 ஓவரில் 3 விக்கெட்டுகளை விழித்தி 3/13 என்று அசத்தியதோடு கேட்ச்கள் ரன் அவுட் என்று பிரமாதப்படுத்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
5/ 10
நியூசிலாந்து அதிவேக பவுலர் லாக்கி பெர்கூசன் நெருக்கடி கொடுத்து தேவ்தத் படிக்கல் விக்கெட்டை 22 ரன்களில் வீழ்த்தினார், படிக்கல் காட் பிகைண்ட்.
6/ 10
ஆர்சிபி அறிமுக வீரர் கே.எஸ்.பரத்தை வீட்டுக்கு அனுப்பிய ரஸல் பிறகு துல்லிய லெக் ஸ்டம்ப் யார்க்கரில் டிவில்லியர்ஸை டக் அவுட் ஆக்கினார்.
7/ 10
92 ரன்களுக்கு ஆர்சிபியை சுருட்டிய பிறகு 93 ரன்கள் இலக்கை ஷுப்மன் கில் சிலபல திகைப்பூட்டும் ஷாட்களில் முடித்து வைத்தார்.
8/ 10
வெங்கடேஷ் அய்யர் அருமையாக ஆடி அறிமுகப் போட்டியிலேயே 27 பந்துகளில் 41 என்று நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
9/ 10
10 ஓவர்களில் 93 ரன்களை எடுத்து வென்றதால் கொல்கத்த நெட் ரன் விகிதம் எகிறியுள்ளது.
10/ 10
13/3 என்று அருமையாக வீசிய புதிர் ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது.
110