ஷ்ரேயஸ் அய்யருக்கு சுனில் நரைன் வீசிய பந்து பிட்ச் ஆகி நின்று திரும்பி ஸ்டம்பை பதம் பார்த்தது கிரேட் டெலிவரி 1 ரன்னில் அவுட் ஆனார் அய்யர். ரிஷப் பந்த்திற்கு டைமிங் சரியாகக் கிடைக்கவில்லை, மேலும் பிட்ச் அடித்து ஆடக்கூடிய பிட்ச் அல்ல. ஸ்மித்தும் ரிஷப் பந்த்தும் ஸ்கோரை 77 ரன்களுக்க்குக் கொண்டு சென்றனர்.
ஸ்மித் 39 ரன்களில் பெர்கூசனிடம் பவுல்டு ஆனார், ஷிம்ரன் ஹெட்மையர், வெங்கடேஷ் அய்யர் பந்தை லாங் ஆஃபில் அடித்து கேட்ச் ஆனார். லலித் யாதவ், அக்சர் படேல் டக் அவுட் ஆகி வெளியேறினர். அஸ்வின் 9 ரன்களையும் ஆவேஷ் கான் 5 ரன்களையும் எடுக்க ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆடி 39 ரன்கள் எடுக்க டெல்லி 127 ரன்கள் எடுத்தது, இந்த பிட்சில் இது ட்ரிக்கியான டோட்டல்தான்.