முகப்பு » புகைப்பட செய்தி » Breaking and Live Updates » ரூ.2000 நோட்டுகளை வைத்து தங்கம் வாங்க பிளானா? இந்த 3 விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்!

ரூ.2000 நோட்டுகளை வைத்து தங்கம் வாங்க பிளானா? இந்த 3 விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்!

Rs 2000 Notes : 2000 நோட்டுகளை மாற்ற சிலர் வேறு வழிகளையும் பின்பற்றுகின்றனர். அதில் ஒன்றுதான் நகைக்கடை.

 • 16

  ரூ.2000 நோட்டுகளை வைத்து தங்கம் வாங்க பிளானா? இந்த 3 விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்!

  புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திருப்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், இன்று முதல் வங்கிகளில் மாற்றிக்கொள்ளும் நடவடிக்கை தொடங்கியது. இந்நிலையில் 2000 நோட்டுகளை மாற்ற சிலர் வேறு வழிகளையும் பின்பற்றுகின்றனர். அதில் ஒன்றுதான் நகைக்கடை.

  MORE
  GALLERIES

 • 26

  ரூ.2000 நோட்டுகளை வைத்து தங்கம் வாங்க பிளானா? இந்த 3 விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்!

  ரூ.2000 நோட்டுகளுடன் நகைக்கடைகளுக்கு மக்கள் செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுவே நல்ல வாய்ப்பு என நினைக்கும் சில நகைக்கடைகள் தங்கத்தின் விலையை விட அதிகமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், அத்தகைய பரிவர்த்தனைகள் எந்த அளவிற்கு நடைபெறுகின்றன என்பது குறித்த புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை.

  MORE
  GALLERIES

 • 36

  ரூ.2000 நோட்டுகளை வைத்து தங்கம் வாங்க பிளானா? இந்த 3 விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்!

  பணம் கொடுத்து தங்கம் வாங்குவதற்கு பான் கார்டு கட்டாயமா என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது. இதற்கும் ஒரு விதி உள்ளது. ரூ.2,00,000க்கு குறைவான பணத்தில் தங்கம் வாங்கினால் பான் கார்டு தேவையில்லை. அதாவது பான் கார்டு இல்லாமல் ரூ.1,99,000 வரை ரொக்கமாக தங்கம் வாங்கலாம்.

  MORE
  GALLERIES

 • 46

  ரூ.2000 நோட்டுகளை வைத்து தங்கம் வாங்க பிளானா? இந்த 3 விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்!

  ரூ.2,000 நோட்டுகளை வைத்து தங்கம் வாங்கினாலும் இதே விதிதான். இருப்பினும், வாடிக்கையாளர் அதிக பணத்துடன் தங்கம் வாங்க விரும்பினால், அவர் தனது பான் கார்டை கொடுக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 56

  ரூ.2000 நோட்டுகளை வைத்து தங்கம் வாங்க பிளானா? இந்த 3 விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்!

  தங்கம் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால் நீங்கள் வாங்கும் தங்கத்துக்குக் கணக்கு காட்ட வேண்டும். அதாவது பில்கள் இருக்க வேண்டும். தங்கம் வைத்திருப்பது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரிய விதிகள் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 66

  ரூ.2000 நோட்டுகளை வைத்து தங்கம் வாங்க பிளானா? இந்த 3 விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்!

  மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) சுற்றறிக்கையின்படி, திருமணமான பெண் 500 கிராம் தங்கத்தையும், திருமணமாகாத பெண் 250 கிராம் தங்கத்தையும், ஆண் 100 கிராம் தங்கத்தையும் வைத்திருக்கலாம். ஆனால் இதற்கு மேல் தங்க ஆபரணங்கள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும்.

  MORE
  GALLERIES