பிரபல கஃபே காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளரும், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி. சித்தார்த்தா திடீரென காணவில்லை. தொழில் சார்ந்த பணிகளுக்காக நேற்று சிக்கமகளூர் சென்ற சித்தார்த்தா, அங்கிருந்து காரில் கேரளா நோக்கி சென்றுகொண்டிருந்தார். மங்களூரு அருகே சென்றபோது தேசிய நெடுஞ்சாலையில் காரை நிறுத்துமாறு கூறி இறங்கி சென்றவர், வெகுநேரமாகியும் திரும்பிவராததால் ஓட்டுநர் சித்தார்த்தாவின் செல்போனுக்கு தொடர்புகொண்டபோது, அது சுவிட்ச் ஆஃப் என வந்ததாக கூறப்படுகிறது. சித்தார்த்தா காரில் இருந்து இறங்கிச் சென்ற பகுதியில், நேத்ராவதி ஆறு ஓடுவதால், ஆற்றிலும் தீவிர தேடுதல் பணி நடந்துவருகிறது. அவர் மங்களூருவில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கடன் மற்றும் வருமான வரி பிரச்னையில் சிக்கியுள்ளதாக குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கு சித்தார்த்தா எழுதிய கடிதம் ஒன்றும் வெளியாகியுள்ளது.