நேர மேலாண்மை அதாவது டைம் மேனேஜ்மென்ட் என்பது ஒரு சூப்பர் பவர். நேரத்தை பயன்படுத்துவது நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களை சரியாகசெய்து முடிக்க மற்றும் நீங்கள் செய்ய விரும்புவதை செய்வதற்கு இன்னும் நேரத்தை கண்டறிய உதவுகிறது. உங்கள் இலக்குகளை விரைவாக அடைய உதவுகிறது. குறைந்த நேரத்தில் அதிக வேலையை செய்து முடிக்க, மன அழுத்தத்தை குறைக்க, இப்போது செய்ய வேண்டாம் பிறகு பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை கைவிட, தன்னம்பிக்கையை அதிகரிக்க என பல வழிகளில் வாழ்வில் முன்னேற மிகப்பெரிய அளவில் உதவுகிறது நேர மேலாண்மை.
தேவையின்றி டிவி பார்ப்பது : நீங்கள் டைம் பாஸிற்காக டிவி பார்க்காமல் குறிப்பிட்ட ஷோ அல்லது மேட்ச் இருந்தால் மட்டுமே டிவி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். என்ன பார்க்க வேண்டும் என்ற ஐடியாவே இல்லாமல் டிவி பார்க்க உட்காரும் நேரத்தை உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி கொள்ள முயற்சிப்பது சிறந்தது.
ஃபைலிங்க் : உங்களது எல்லா அலுவலக ஆவணங்களையும் பயன்பாட்டிற்கு ஏற்ப தனித்தனி ஃபைல்களில் அடுக்கி வைத்து கொள்ளுங்கள். மேலும் தினசரி அவற்றை பயன்படுத்திய பிறகு அவற்றை உரிய இடத்தில் மறக்காமல் வைக்கவும். இல்லை என்றால் ஒவ்வொரு நாளும் ஆவணங்களை தேடி எடுப்பதற்கே நீங்கள் நிறைய நேரத்தை வீணடிக்க நேரிடுகிறது.
சோஷியல் மீடியா : தேவையான விஷயங்களை பார்க்க சோஷியல் மீடியாக்களை பயன்படுத்துவது என்ற பழக்கம் பெரும்பாலும் யாருக்கும் இருப்பதில்லை. 1 மணி நேரம் சோஷியல் மீடியாவில் இருந்தால் குறைந்தபட்ச 5 - 10 நிமிடங்கள் மட்டுமே நமக்கு தேவையானதை பார்க்கிறோம். அதற்காக சோஷியல் மீடியாவை தொடவே வேண்டாம் என்று கூறவில்லை. மாறாக மொபைல் மற்றும் சோஷியல் மீடியாவில் பலமணி நேரங்கள் செலவழிப்பதற்கு பதிலாக நேரத்தை கட்டுப்படுத்தி கொண்டு வாழ்விற்கு தேவையான விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.
சீரற்ற போன் கால்ஸ் : எப்போதுமே மொபைல் நம் கூடவே இருப்பதால் எந்த நேரமும் கால்ஸ் பேசி கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை. போன் கால்ஸிற்கென்றே ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். சிலர் பேசுவதை அதிகம் விரும்புகிறார்கள்.அது போன்ற நபர்கள் பேசும் போது அடிக்கடி கடிகாரத்தைப் பார்ப்பது மிகவும் உதவுகிறது.
ஸ்னுஸ் பட்டன் (snooze button) : நீங்கள் வைத்த அலாரம் அடிக்கும் போது எழுந்திருப்பது அந்த நாளில் உங்களுக்கு நிறைய நேரத்தை வழங்குகிறது. ஆனால் snooze button-ஐ தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு முறையும் 10 நிமிடங்கள் உங்கள் சோம்பலில் சேர்க்கிறது. snooze button உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை.