ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மண் வளத்தை பாதுகாப்பதால் இத்தனை நன்மைகள் இருக்கா..? தெரிந்துகொள்ள வேண்டியவை..!

மண் வளத்தை பாதுகாப்பதால் இத்தனை நன்மைகள் இருக்கா..? தெரிந்துகொள்ள வேண்டியவை..!

மண்ணில் கண்ணுக்குத் தெரியாத உயிருள்ள அல்லது உயிரற்ற பொருள்களும் உள்ளன. இதோடு ராசயனங்களும், கனிம வளங்களும், சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றால் ஆன அலுமினோசிலிக்கேட் போன்றவை அதிகளவில் உள்ளது. எனவே மண்ணை வளமானதாகவும், உற்பத்தித் திறன் கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்து பாதுகாப்பது அனைவரின் கடமை.

 • 16

  மண் வளத்தை பாதுகாப்பதால் இத்தனை நன்மைகள் இருக்கா..? தெரிந்துகொள்ள வேண்டியவை..!

  “இன்றைக்கு உள்ள அனைத்து இயற்கை சீற்றங்கள் மற்றும் மனிதர்கள் மேற்கொள்ளும் செயற்கை சீற்றங்களையெல்லாம் பெருமையுடனும், சகிப்புத்தன்மையுடன் கையாண்டுவருகிறது மண் “…விவசாயம் செய்தால் அதில் ராசாயண உரங்கள், மனிதர்களால் குப்பைத்தொட்டிகள் முழுவதும் பாலீதின் கவர்கள்…மணல் கடத்தல் என பல்வேறு விதமாக நமக்கு பல வழிகளில் உபயோகமாக இருக்கும் மண்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறோம். இதனால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் எல்லாம் படிப்படியாக செத்து மடிகின்றன. இந்த பூமியின் வாழ்வாதாரத்திற்கும், தாவர வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் இந்த மண்ணில் தான் பதிந்து கிடக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். எனவே இந்த மண்ணை அழித்தால் நம் அனைவரின் எதிர்காலம் கேள்விக்குறி தான்.

  MORE
  GALLERIES

 • 26

  மண் வளத்தை பாதுகாப்பதால் இத்தனை நன்மைகள் இருக்கா..? தெரிந்துகொள்ள வேண்டியவை..!

  எனவே மண்ணைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி, உலக மண் தினமாக சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. மண்ணின் முக்கியத்துவம் மற்றும் அதன் நிலையான மேலாண்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் மக்கள் இதை முறையாக பின்பற்ற வேண்டும் என்பது தான் இந்நாளில் முக்கிய குறிக்கோளாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 36

  மண் வளத்தை பாதுகாப்பதால் இத்தனை நன்மைகள் இருக்கா..? தெரிந்துகொள்ள வேண்டியவை..!

  மண்ணின் பாதுகாப்பு : மண்ணில் கண்ணுக்குத் தெரியாத உயிருள்ள அல்லது உயிரற்ற பொருள்களும் உள்ளன. இதோடு ராசயனங்களும், கனிம வளங்களும், சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றால் ஆன அலுமினோசிலிக்கேட் போன்றவை அதிகளவில் உள்ளது. எனவே மண்ணை வளமானதாகவும், உற்பத்தித் திறன் கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்து பாதுகாப்பது அனைவரின் கடமை. குறிப்பாக பயிர் சுழற்சி, விளிம்பு உழுதல், மொட்டை மாடி விவசாயம் ஆகியவை மண்ணைப் பாதுகாக்கும் சில வழிமுறைகளாக உள்ளன.

  MORE
  GALLERIES

 • 46

  மண் வளத்தை பாதுகாப்பதால் இத்தனை நன்மைகள் இருக்கா..? தெரிந்துகொள்ள வேண்டியவை..!

  குறிப்பாக நம் மண்ணில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் இருக்கும் போது, நாம் பயிரிடும் பயிர்களின் தரத்தையும், அளவையும் நாம் அதிகரிக்க முடியும். இதனால் விவசாயம் செழிப்பதோடு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாத நிலையை நாம் உருவாக்க முடியும். இதோடு மட்டுமின்றி விவசாயிகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றான மண் அரிப்பையும் நாம், மண்ணின் தரத்தை முறையாக பாதுகாப்பதன் மூலம் நாம் தடுக்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 56

  மண் வளத்தை பாதுகாப்பதால் இத்தனை நன்மைகள் இருக்கா..? தெரிந்துகொள்ள வேண்டியவை..!

  மண்ணின் தரம் முறையாக கெடாமல் இருந்தால் மட்டுமே சுத்தமான தண்ணீரும் நமக்குக் கிடைக்கும். எனவே மண்ணின் தரத்தை நாம் பாதுகாக்க முயல்வது நமக்கு மட்டுமில்லை, நம்முடைய வருங்கால சந்ததியினருக்கும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். நமக்காகவும், வருங்கால சந்ததியினருக்கும் மாசு இல்லாத சூழலை உருவாக்க மண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்பதை அனைவருக்கும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 66

  மண் வளத்தை பாதுகாப்பதால் இத்தனை நன்மைகள் இருக்கா..? தெரிந்துகொள்ள வேண்டியவை..!

  எனவே முடிந்தவரை உங்களது வீடுகளில் அல்லது தோட்டங்களில் இயற்கை உரங்களால் ஆன விவசாயம் மேற்கொள்வது, உங்களைச் சுற்றியுள்ள இடங்களைப் பசுமையாக வைத்திருத்தல் மற்றும் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இயற்கை வளம் மற்றும் மண்ணின் தரத்தைப் பாதுகாப்பது குறித்த ஆலோசனையை வழங்குங்கள். நிச்சயம் இது உங்களுக்கு வளமான மற்றும் ஆரோக்கியமான சூழலை அமைத்துத்தரும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

  MORE
  GALLERIES