1800 களில் மதுபானக் கூடங்களில் வழங்கப்படும் பானமாக சாக்லேட் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.அதன் வடிவமும், வகைகளும் மாற மாற உலக நாடுகள் அனைத்திலும் உண்ணப்படும் பொருளாக சாக்லேட் மாறியுள்ளது.சாக்லேட் வகைகளில் குறிப்பாக ஹோம் மேட் சாக்லேட்களுக்கு உலகம் முழுக்க வரவேற்பு இருந்து வருகிறது.தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஹோம்மேட் சாக்லேட்களுக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது.
இங்கு 60 வகையான சாக்லேட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகை சாக்லேட்டிலும் ஒவ்வொரு சிறப்பம்சம் உள்ளது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள், வயது முதிர்ந்தோர் உண்ணும் வகையிலான சாக்லேட்டுகளும் இங்கு தயாராகின்றனர் மன அழுத்தம் உள்ளபோது சாக்லேட்களை உண்டால் மன அழுத்தம் மறைந்து லேசாகி விடும் என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.
சாக்லேட்கள் தயாரிப்பதை நேரில் காணும்போது தங்களது சாக்லேட் ஆர்வம் கூடுதலாகி விட்டதாக கூறுகின்றனர் சுற்றுலா பயணிகள் உடல்நலத்திற்கு தேவையான பொருட்களை சாக்லேட் உடன் இணைத்து தயாரிக்கப்படும் உதகை சாக்லேட் வகைகளை போல இதுவரை கண்டதில்லை என்றும் கூறுகின்றனர். ஆண்டின் ஒவ்வொரு நாளையும் போல இன்றும் உலகின் சுவை நரம்புகளை இனிக்க வைத்து கரைகிறது சாக்லேட்.