முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » Women's Day 2023 : சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்..? உங்களுக்கான சில டிப்ஸ்..!

Women's Day 2023 : சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்..? உங்களுக்கான சில டிப்ஸ்..!

பெண்கள் தினத்தன்று என்ன பரிசு கொடுப்பதென்று தெரியவில்லையா.. அவர்களின் முகங்களில் புன்னகையை உருவாக்க சிறந்த பரிசுகளின் பட்டியல்.!

 • 110

  Women's Day 2023 : சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்..? உங்களுக்கான சில டிப்ஸ்..!

  ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி அன்று, "சர்வதேச மகளிர் தினம்" உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தன்று, அவர்களின் முகங்களில் புன்னகையை உருவாக்க சிறந்த பரிசுகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.

  MORE
  GALLERIES

 • 210

  Women's Day 2023 : சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்..? உங்களுக்கான சில டிப்ஸ்..!

  மணி பிளாண்ட் (Money plant) : ஒரு அழகான பூந்தொட்டியில் உள்ள மணி பிளாண்ட் செடி, பெண்களுக்கு பரிசளிக்க பொருத்தமான ஒரு பொருளாக விளங்குகிறது. வீடுகளில் பால்கனி, அலுவலகம், போன்ற இடங்களில் எளிதாக வளர்க்கலாம். மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும். கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என்றும் கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 310

  Women's Day 2023 : சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்..? உங்களுக்கான சில டிப்ஸ்..!

  ஹேண்ட் பேக் (Hand bag) : ஹேண்ட் பேக் பெண்களுக்கு வெளியே செல்லும் போது, மிகவும் முக்கியமான ஒன்றாகும். சிலர், ஹேண்ட் பேக் இல்லாம வெளியே செல்ல மாட்டார்கள். எனவே இந்த மகளிர் தினத்தில் உங்கள் சகோதரி அல்லது மனைவிக்கு நீங்கள் ஹேண்ட்பேக் பரிசளிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 410

  Women's Day 2023 : சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்..? உங்களுக்கான சில டிப்ஸ்..!

  அணிகலன்கள் (Accessories) : பெண்கள் எப்போதும் ஒரு தனித்துவமான பரிசையே விரும்புவார்கள், உங்கள் மனைவி அல்லது காதலியும் அப்படி இருக்கலாம். எனவே ஒரு தனித்துவமான நெக்லஸ் அல்லது அவர்கள் விரும்பு அணிகலன்களை பரிசளித்து அவர்களை ஆச்சரியப்படுத்துங்கள். ஒரு அழகான கல் பதிக்கப்பட்ட நெக்லஸ் உங்கள் மனைவி, சகோதரி அல்லது தாய்க்கு சிறந்த மகளிர் தின பரிசாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 510

  Women's Day 2023 : சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்..? உங்களுக்கான சில டிப்ஸ்..!

  கைக்கடிகாரம் ( Hand watch) : ஒரு அழகான கைக்கடிகாரம் நிச்சயமாக பெண்களை மகிழ்விக்கும் பொருளாகும். பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் பல வாட்ச்கள் சந்தையில் இப்போது கிடைக்கின்றன. பெண்கள் கண்டிப்பாக இவற்றை விரும்புவார்கள். அதுவும் ஸ்மார்ட் வாட்ச் டிரெண்டிங்கில் இருப்பதால் அதுவும் அவர்களுக்கு பிடித்த பொருளாக மாறியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 610

  Women's Day 2023 : சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்..? உங்களுக்கான சில டிப்ஸ்..!

  ஹேட் டிரையர் (Hair dryers) : பெரும்பாலான இல்லத்தரசிகள் தங்கள் அன்றாட வேலைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பதால், அவர்களுக்கு அடிக்கடி பியூட்டி சலூனுக்குச் செல்ல நேரம் கிடைப்பதில்லை. மேலும் உங்கள் காதலியோ, அம்மா அல்லது சகோதரிகளோ வேலைக்கு அல்லது கல்லூரிக்கு செல்பவர்களாக இருந்தால் காலையில் குளித்து முடித்தவுடன் அவர்களின் கூந்தலை உலரவைப்பதில் கடும் சிரமம் அடைவர். இது போன்ற நேரங்களில் நீங்கள் பரிசாக அளிக்கும் ஹேட் டிரையர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 710

  Women's Day 2023 : சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்..? உங்களுக்கான சில டிப்ஸ்..!

  புளூடூத் மியூசிக் பிளேயர் (Bluetooth music player) : புளூடூத்மியூசிக் பிளேயரில் உங்களுக்குத் தேவையான அனைத்து விருப்பமான பாடல்களை கேட்டு மகிழலாம். இந்த மகளிர் தினத்தில், உங்கள் அம்மா, சகோதரி, முதலாளி, நண்பர்கள் அல்லது மனைவிக்கு உங்கள் அன்பையும் அபிமானத்தையும் வெளிப்படுத்த புளூடூத் மியூசிக் பிளேயரை பரிசாக வழங்குங்கள்.

  MORE
  GALLERIES

 • 810

  Women's Day 2023 : சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்..? உங்களுக்கான சில டிப்ஸ்..!

  வாசனை திரவியங்கள் (Perfumes) : பெண்களின் நலன்களை அறிந்து எந்த ஒரு பரிசையும் சிறப்பாக வழங்கினால் அவர்களுக்கு அது நிச்சயம் பிடிக்கும். பெண்களுக்கு வாசனை திரவியம் மிகவும் பிடித்த பொருளாகும். பல நிறுவனங்கள் ஒரு நபருக்கு பிடித்த வாசனையைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கின்றன. எனவே சிறந்தவற்றை தேர்வு செய்து பரிசாக வழங்குங்கள். மகளிர் தினத்தை மேலும் சிறப்படையச் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 910

  Women's Day 2023 : சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்..? உங்களுக்கான சில டிப்ஸ்..!

  அழகு சாதனங்கள் (makeup kits) : பெண்கள் எப்போதும் அனைவரையும் கவரவேண்டும், எப்போதும் அழகில் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். எனவே மகளிர் தினத்தன்று ஒரு மேக்கப் கிட்டை உங்கள் மனைவி அல்லது சகோதரிக்கு பரிசளிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 1010

  Women's Day 2023 : சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்..? உங்களுக்கான சில டிப்ஸ்..!

  மசாஜர் ( Body massager) : மன அழுத்தத்தையும் உடல் வலிகளையும் போக்கிக்கொள்ள உயர் செயல்திறன் கொண்ட முழு உடல் மசாஜரை பரிசாக வழங்குங்கள். ஏனெனில் ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் இன்று பெண்கள் வேலை செய்துவருகின்றனர். கார் பைக் போன்றவற்றை எளிதாக இயக்குகின்றனர். வீட்டிலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருகு தேவையான அனைத்தையும் செய்கின்றனர். இவர்கள் தலை மற்றும் கை கால்களுக்கு கண்டிப்பாக ஒரு ரிலாக்‌ஷேசன் தேவை. எனவே ஒரு பாடி மசாஜரை பரிசளிப்பது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்.

  MORE
  GALLERIES