ஆனால் நமது வேகமான மற்றும் நவீன வாழ்க்கைமுறையில் பிஸியாக இருப்பதால், வீட்டில் வாளர்க்கப்படும் நாய்களுக்கு தினமும் நல்ல அழகான வாக்கிங் அவசியம் தேவை என்பதை நம்மில் பலர் அடிக்கடி மறந்து விடுகிறோம். ஒரு சிலர் தாங்கள் வாக்கிங் அழைத்து செல்ல முடியாவிட்டாலும், அதற்கென்று தனி ஆளை வைத்திருப்பார்கள். ஆனால் பல ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ள உண்மை பெரும்பாலான செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் நாய்களை வெளியில் வாக்கிங் அழைத்து செல்லவில்லை என்பது தான். உங்கள் வீட்டில் நீங்கள் நாய் வளர்கிறீர்கள் என்றால் அதை ஏன் வெளியே வாக்கிங் அழைத்து செல்ல வேண்டும் என்பதற்கான சில முக்கிய காரணங்கள் இங்கே..
எடை கூடுவது மற்றும் சுகாதார பிரச்சனைகள் : பல நாய்கள் நிதானமான வாக்கிங் உலா அல்லது சுறுசுறுப்பாக விளையாட வெளியில் அழைத்துச் செல்லப்படாத போது அதிக எடை போட்டு விடும் மற்றும் மந்தமாக இருக்கும். உணவை மட்டுமே சாப்பிட்டு விட்டு நடக்காமல், ஓடாமல், விளையாடாமல் இருந்தால் உடற்பயிற்சிகள் இன்றி நாம் பாதிக்கப்படுவது போல நாய்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். எனவே உங்கள் நாயை விளையாட அல்லது நடக்க வெளியே அழைத்து செல்லாவிட்டால் எடை கூடுதல் உள்ளிட்ட பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம்.
வாக்கிங் போகும் போது ட்ரெயினிங் : பெரும்பாலான ட்ரெயினிங் நாய்களுக்கு வீட்டிற்குள் கொடுக்கப்பட்டாலும் வெளியில் மற்றும் பொது இடங்களில் நாய்களுக்கு ட்ரெயினிங் நல்லது. இதன் மூலம் உங்கள் நாயின் செயல்திறன் மிகவும் மேம்பட்டதாக மாறும். அவை சுற்று சூழலை உணர கூடியதாகவும் இருக்கும். இது மிகவும் பிரபலமான கான்செப்ட் ஆகும், ஏனெனில் இது உங்கள் நாயை ட்ரெயின் செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக இதை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
உங்களுக்கும் நாய்க்குமான உறவு வலுப்படும்: நாய்கள் எப்போதுமே தங்களது ஓனரை நேசிக்கின்றன, மிகவும் நம்புகின்றன. அளவு கடந்த பாசத்தையும், விசுவாசத்தையும் அவர்களிடம் நாய்கள் வெளிப்படுத்துகின்றன. எனவே உங்கள் நாயுடன் நீங்கள் பேசி, விளையாடுவது உங்கள் இருவருக்கும் இடையே நம்பிக்கை மற்றும் அன்பை அதிகரிக்கிறது. குறிப்பாக நீங்கள் அவற்றுக்குக்கு மிகவும் பிடித்த வாக்கிங்கிற்கு அவற்றை அழைத்து செல்வது அவற்றை நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியடைய செய்யும். உங்களை இன்னும் ஆழமாக நேசிக்கும்.
மற்ற நாய்களுடன் பழக : ஒரே வீட்டில் ஒரே இடத்தில் இருந்தால் நமக்கு போரிங்காக இருப்பது போல தான் அவற்றுக்கும் இருக்கும். நீங்கள் வாக்கிங் அழைத்து செல்லும் போது வெளியே பார்க்கும் மற்ற நாய்களுடன் அவை பழகும் வாய்ப்பு ஏற்படும். பிற நாய்களுடன் உங்கள் வளர்ப்பு நாய் பழகி சுறுசுறுப்பாக விளையாடினால் அதன் சமூக திறன்கள் வளரும். இது அவற்றின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிற்குமே நல்லது.