2021 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிந்து விடும். புதிய ஆண்டு, புதிய தொடக்கம் புதிய குறிக்கோள்கள் என்று நம் வாழ்க்கை முறையை மாற்றுவதற்கான ஒரு உந்துதலாக ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கிறது. கொண்டாட்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் புத்தாண்டில் நிறைவேற்றிய வேண்டிய தீர்மானங்களாக பக்கெட் லிஸ்ட் முதல் வாழ்க்கை குறிக்கோள்கள் வரை பல தீர்மானங்களை மேற்கொள்வோம். ஆனால் புத்தாண்டு அன்று நாம் தீர்மானங்கள் எடுக்கும் போது இருக்கும் ஆற்றலும் ஊக்கமும் நாளடைவில் குறைந்து விடும் புத்தாண்டு தீர்மானங்கள் நிறைவேற்றாமல் போய் விடுகிறது.
எதார்த்தம் இல்லாத, சாத்தியமாகாத தீர்மானங்கள் : புத்தாண்டு தீர்மானம் என்பது, நீங்கள் என்ன 'செய்ய வேண்டும்' என்பதை விட நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதையே குறிக்கிறது. மக்கள் மிகக் கடினமான குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானங்களை மேற்கொள்கிறார்கள். விரைவாக செய்ய முடியாதவை, செய்வதற்கு வாய்ப்பே இலலதவை, அல்லது விரைவாக நடைமுறைக்கு பொருந்தாத இலக்குகள் உள்ள தீர்மானங்களை பெரும்பாலும் மேற்கொள்கிறார்கள்.
உங்கள் தீர்மானங்களை நிறைவேற்ற முடியுமா என்பதைப் பார்க்க, அவற்றை அளவிடக்கூடியவையா, செல்லுபடியாகும் கால அளவு இருப்பது போல, கால வரம்பால் கட்டுப்படுத்தப்படுகிறதா, உங்களின் இலக்குகளுக்கு சாதகமாக இருக்கிறதா, நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் அடைய முடியுமா ஆகிய கேள்விகளுக்கு உங்களால் சாதகமான பதில் அளிக்க முடியவில்லை என்றால், அத்தகைய தீர்மானத்தை எப்போதும் செயல்படுத்த முடியாது.
திட்டம் இல்லை : எல்லா விஷயங்களையும் திட்டமிட்டு செய்ய முடியாது. ஆனால், உங்கள் குறிக்கோள்கள் அல்லது நீங்கள் செய்ய விரும்பும் சின்ன விஷயங்களுக்கும் சரியான திட்டங்களை மேற்கொண்டால், உங்கள் புத்தாண்டு தீர்மானங்களை எளிதாக நிறைவேற்ற முடியும். உதாரணமாக, குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடிவு செய்தால், எந்தெந்த மாதம் எவ்வளவு தொகையை சேமிக்க முடியும் என்பதைப் பற்றி குறைந்தபட்ச திட்டமாவது வைத்திருக்க வேண்டும்.