10 பேர் இருந்தாலும் ஒருவரை மட்டும் கொசு கடிக்க என்ன காரணம் தெரியுமா?
மற்ற வகை ரத்தம் கொண்டோரை ஒரு முறை கொசு கடிக்கிறதென்றால் 'o' வகை இரத்தம் கொண்டோரை மட்டும் இரண்டு முறை கடிக்குமாம்.
News18 Tamil | August 20, 2020, 2:07 PM IST
1/ 9
கூட்டாக அமர்ந்து கொண்டிருக்கும்போது ஒருவர் மட்டும் கொசுவை அடித்துக்கொண்டு, கொசுக் கடியால் புலம்பிக் கொண்டிருப்பார். எங்களுக்கு கொசு தெரியலையே ஒருவேளை கொசுவுக்கு உன் ரத்தம்தான் பிடித்திருக்கு போல என விளையாட்டாக பேசுவோம்.
2/ 9
அப்படி விளையாட்டாக பேசியதை உண்மை என்று நிரூபித்துள்ளது ஆராய்ச்சிக் குழு. இதை மெடிக்கல் எண்டொமொலஜி இதழ் வெளியிட்டுள்ளது. அதாவது கொசுக்களுக்கு 'o' வகை ரத்தம்தான் மிகவும் பிடிக்குமாம். மற்ற வகை ரத்தம் கொண்டோரை ஒரு முறைக் கடிக்கிறதென்றால் 'o' வகை இரத்தம் கொண்டோரை மட்டும் இரண்டு முறைக் கடிக்குமாம்.
3/ 9
அதுமட்டுமன்றி கொசுக்களுக்கு CO2 மிகவும் அவசியம். அதை அதிகமாக எந்த உடல் வெளியிடுகிறதோ அதுதான் கொசுக்களுக்கான ரத்த வங்கி. அதாவது CO2வை அதிகமாக கொண்டோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தியின் ஆற்றல், ஜெனிடிக் போன்ற இதர சத்துக்கள் அதிகமாக இருக்குமாம்.
4/ 9
எனவே நீங்கள் எவ்வளவு அதிகமாக கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகிறீர்களோ அந்த அளவிற்கு கொசுக்களால் ஈர்க்கப்படுவீர்கள்.
5/ 9
அதேபோல் உடற்பயிற்சியின் போது தசைகள் இறுக்கமாகும். அப்போது உடல் இலகுத் தன்மைக்காக லாக்டிக் ஆசிடை தோல் வெளியேற்றும். அதுவும் கொசுக்களுக்கு இரத்தத்தை உறிஞ்ச சிறந்த சிக்னலாகும்.
6/ 9
இவற்றையெல்லாம் தன் கண்கள் வழியாகவே கண்டறிவதாக இதன் ஆராய்ச்சியாளர் எஃப். டே கூறுகிறார். கொசு அமர்வதற்கு முன் தரையில் அமர்ந்திருந்து உங்களை உற்று நோக்கிய பின்னரே கடிக்குமாம். அப்படி அடி மட்டத்திலிருந்து பார்க்கும் கொசுவிற்கு அடர் நிறங்கள்தான் தெளிவாகத் தெரியுமாம்.
7/ 9
அதனால்தான் கருப்பு, கருஞ்சிவப்பு என அடர் நிறம் கொண்ட ஆடைகளை அணிந்தால் விரைவில் உங்களை சூழ்ந்துகொள்கிறது. வெளிர் நிற ஆடைகளை அவ்வளவு எளிதில் கண்டறிய இயலாதாம். எனவே கொசு கடிக்க நீங்கள் அணியும் ஆடையும் முக்கிய காரணம்.
8/ 9
அதேபோல் வெப்பம் நிலை அதிகம் கொண்ட உடலும் கொசுக்களுக்குப் பிடிக்குமாம். அவர்களுக்கு இரத்தத்தின் அடர்த்தி அதிகமாகவும், தோலிற்கு மிக அருகிலும் இருப்பதால் இரத்தத்தை எளிதில் உறிஞ்சுவிடலாம்.
9/ 9
இவை தவிர அதிக உடற்பயிற்சியால் உடல் சூடானாலும் கொசுக்களுக்குப் பிடிக்குமாம். மது குடித்திருந்தாலும் அவர்களை கொசுவுக்கு மிகவும் பிடிக்குமாம். இப்படி கொசுக்களுக்கும் சில டேஸ்ட் இருப்பதால்தான் கொசுக்கள் உங்களை மட்டும் டார்கெட் செய்கிறது.