வாழ்க்கையில் எப்போதும் இரண்டு விதமான மனிதர்கள் இருப்பார்கள். கடினமாக உழைக்கும் மனிதர்கள் ஒருவிதம். அவ்வாறு அவர்களின் உழைப்பில் செய்து முடித்த வேலையின் மூலம் கிடைக்கும் பெருமையையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் அடையும் மனிதர்கள் மற்றொரு விதம். மேலும் நமது அன்றாட வாழ்வில் இப்படிப்பட்ட மனிதர்களால் பாதிக்கப்பட்ட சிலரை நம்மால் கண்கூடாக பார்க்க முடியும்.
அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்த பின்பு தன்னுடைய வேலை மட்டுமல்லாமல் மற்ற சில இதர வேலைகளையுமே நிர்வாகத்தினர் இவர்களின் தலையில் கட்டி விடுவார்கள். அவற்றை செய்யவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் மன உளைச்சலுக்கும் உடல் சோர்வுக்கும் ஆளாகின்றனர். இதுபோன்ற கார்ப்பரேட் அரசியலில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிப்பதற்கான ஐந்து வழிமுறைகளை பற்றி இப்போது பார்ப்போம்
உங்களது வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள் : நீங்கள் அலுவலகத்தில் வேலைக்கு சேரும்போது உங்களுக்கென ஒரு குறிப்பிட்ட பொறுப்பை மட்டுமே கொடுத்து அதற்காக உங்களை பணியமர்த்துவார்கள். அதற்கு அர்த்தம் என்னவெனில் மற்ற இதர வேளைகள் உங்களுக்கானவை அல்ல. ஆனால் உங்களது திறமை மற்றும் நிர்வாக திறனாகியவற்றை உங்களது அலுவலக நிர்வாகம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வேறு பல வேலைகளை உங்கள் தலையில் கட்ட முயற்சிக்கலாம். எனவே இது போன்ற சூழ்நிலைகளுக்கு இடம் கொடுக்காமல் முடிந்த வரை உங்களது வேலையை மட்டும் பொறுப்புடன் கவனமாக செய்து வருவது நல்லது.
அனைத்து விஷயங்களையும் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள் : உங்கள் பக்கம் நடக்கும் அனைத்து சின்ன சின்ன விஷயங்களையும் உங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவது நல்லது. மிகச் சிறிய இடைவேளை எடுப்பது என்றால் கூட உங்களது உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு செல்வது உங்கள் மீது ஒரு நன்மதிப்பை உண்டாக்கும். மேலும் எதிர்காலத்தில் நீங்கள் உயரதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் ஏற்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள் : அலுவலகம் மட்டுமல்ல நீங்கள் எங்கிருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட உங்களுக்கென ஒரு எல்லைகளை வகுத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. இது போன்ற ஒரு தன்மையை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் போது மற்றவர் உங்களுக்கு கட்டளை இடுவதற்கு பதிலாக எப்போதும் உங்களிடம் வேலையை செய்ய முடியுமா என்பது போன்ற கோரிக்கையை தான் வைப்பார்கள்.
துணிந்து பேசுங்கள்:உங்களுக்காக நீங்கள் தான் பேச வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். மிக அதிக அளவிலான வேலைகளை உங்கள் மீது தைரியமாக அதை எதிர்த்து உங்கள் நிர்வாகத்தினரிடம் புகார் அளியுங்கள். நீங்கள் எதுவுமே சொல்லாமல் நிர்வாகத்தினர் அளிக்கும் அனைத்து வேலைகளையும் உங்கள் தலைமீது போட்டுக் கொண்டால், அதன் பிறகு அதிலிருந்து வெளிவருவது மிகவும் கடினம்.
பணியை விட்டு விலகுவது : மேலே சொன்ன எந்த வழிமுறையும் வேலை செய்யவில்லை எனில் பணியை விட்டு விலகுவது தான் கடைசி தேர்வாக இருக்க முடியும். வேலை போய்விட்டால் வாழ்க்கையை முடிந்து விட்டது என்பது போன்ற எண்ணத்தை தூக்கி போடுங்கள். நீங்கள் எவ்வளவுதான் கடின உழைப்பாளராக இருந்தாலும், அலுவலகத்திற்காக எவ்வளவு உழைத்துக் கொண்டு இருந்தாலும், அலுவலகம் உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை மாற்றம் செய்ய எப்போதும் தயாராக இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும். ஓரளவுக்கு மேல் உங்களால் அலுவலக சித்திரவதைகளை தாங்க முடியவில்லை எனில் தைரியமாக பணியை ராஜினாமா செய்துவிட்டு மனதிற்கு நிம்மதியாக வேறு ஒரு அலுவலகத்தில் சேரலாம்.