கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பெறுவதில் பல தம்பதிகளும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்துள்ளனர். பெண்களுக்கு தான் கருத்தரிப்பதில் பிரச்சனை இருக்கும் என்று பரவலாக இருந்த நிலை மாறி ஆண்களுக்கும் பிரச்சனைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. பொதுவாகவே கரு தரிக்காமல் இருப்பது கர்ப்பப்பையில் பிரச்சினை இருக்கிறது அல்லது சிறுநீரகத்தில் ஏதாவது கோளாறு இருந்தால் அது கர்ப்பப்பை மற்றும் குழந்தை பெறுவதில் பிரச்சினைகளை உண்டாக்கும் என்பதால் மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் சிறுநீரக மருத்துவ நிபுணர்களை அணுகுவார்கள். அதாவது கைனகாலஜிஸ்ட் மற்றும் யூராலஜிஸ்ட்.
குழந்தை பிறப்பதில் மட்டுமே பிரச்சனை இருக்கிறது என்னும் பொழுது ஒவ்வொருவருக்கும் அதற்கான காரணங்கள் வேறுபடலாம். இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நீங்கள் ஃபெர்டிலிட்டி ஸ்பெஷலிஸ்ட், அதாவது கருவுறுதல் சிறப்பு மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். ஃபெர்டிலிட்டி ஸ்பெஷலிஸ்ட் என்பவர்கள் குழந்தை பிறப்பதில் எது சிக்கலாக அல்லது தடையாக இருக்கிறது என்பதை பற்றி சிறப்பு படிப்பு முடித்த மகப்பேறு மற்றும் சிறுநீரக மருத்துவ நிபுணர்கள் தான்.
எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே விதமான மருத்துவரை அணுகுவது என்பது உங்களுக்கு சரியான தீர்வை வழங்காது. உதாரணமாக உங்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டி இருந்தால் அதற்கு நீங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகலாம். ஆனால் சிறுநீரக தொற்று அல்லது ஹார்மோன் குறைபாடு இருக்கும் பொழுது அதற்கு மகப்பேறு மருத்துவரால் முழுமையான தீர்வு வழங்க முடியாது.
ஆண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு - ஆண்ட்ராலஜிஸ்ட் : ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை பிரச்சனைக்கான (மேல் ஃஇன்பிர்டிலிட்டி) சிகிச்சை மற்றும் தீர்வுகளை வழங்கும் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற யூராஜிஸ்ட் தான் ஆண்ட்ராலஜிஸ்ட் என்று கூறப்படுகிறார்கள். இந்த மருத்துவ நிபுணர்கள், தனியாகவோ அல்லது ஒரு இனப்பெருக்க உட்சுரப்பியல் நிபுணருடன் இணைந்தோ செயல்படலாம். ஆண்களுக்கு ஏற்படும் இன்ஃபெர்டிலிட்டிக்கு விந்தணு குறைபாடு, விறைப்புத்தன்மை குறைபாடுகள், முன்கூட்டியே விந்து வெளியேறுதல், தொற்றுநோய், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கண்டறிந்து சிகிச்சை உரிய சிகிச்சை அளிக்கின்றனர்.
இரு பாலருக்கும் என்ன சிகிச்சை முறை பலனளிக்கும் - இனப்பெருக்க உட்சுரப்பியல் நிபுணர் (Reproductive endocrinologist) : இந்த நிபுணர்கள் தான் கருவுறுதலில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிவது, உரிய சிகிச்சைகளை பரிந்துரை செய்வதில் வல்லவர்கள். பொதுவாக, ஃ பெர்டிலிட்டி மருத்துவர்கள் என்றாலே, இவர்களைக் கூறலாம். இவர்கள் ஆண் மற்றும் பெண் என்ற இருபாலருக்குமே ஏற்படும் கருவுறுதல் பிரச்சனைகளை கண்டறிந்து, சிகிச்சை அளிப்பவர். அது மட்டுமின்றி, ஒரு பெண்ணுக்கு, இயற்கையாக கருவுறுவதில் பிரச்சனைகள் இருந்தால், அப்பெண்ணுக்கு எந்த வகையான ஃபெர்டிலிட்டி சிகிச்சைகள் செய்வது சரியாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த பல்வேறு சோதனைகளைச் செய்வார்கள்.
கருச்சிதைவு, IVF சிகிச்சை தோல்வி ஆகிய பிரச்சனைகளுக்கு - இனப்பெருக்க நோயெதிர்ப்பு நிபுணர்கள் : இந்த மருத்துவ நிபுணர்களின் பெயரில் இருப்பது போலவே, இவர்கள் இனப்பெருக்க ஆரோக்கியம், மற்றும் நோயெதிர்ப்பு மருத்துவம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள். ஒரு சிலருக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படாமல் இருந்தால், கரு நிலைக்காமல், கருச்சிதைவு ஏற்படும். அதே போல, செயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சித்தாலும், தோல்வி ஏற்படும். அவ்வகையான பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சையை பரிந்துரைக்க, reproductive immunologist உதவி தேவை. அதே போல, ஆடோ-இம்யூன் குறைபாடு கொண்டவர்களுக்கு ஃபெர்டிலிட்டி சிகிச்சைக்கு, இவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்.
இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்சனை இருப்பவர்களுக்கு, இனப்பெருக்க அறுவை சிகிச்சை நிபுணர் (Reproductive surgeon) : பொதுவாக, ஒரு சிலருக்கு மட்டும் தான் இந்த சூழல் ஏற்படும். உதாரணமாக, ஆண்களுக்கு ஒரு டெஸ்டிக்கிலை நீக்க வேண்டும், அல்லது பெண்களுக்கு நீர்க்கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே நீக்க வேண்டும் என்ற சூழலில், இதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அவசியம்.