திருமணமான பிறகு, புதுமணத் தம்பதிகள் தனியாக பயணம் செய்வதை பொதுவாக லவு அல்லது ஹனிமூன் என்று அழைக்கிறோம். ஆனால் இந்த பயணம் ஏன் ஹனிமூன் என்று அழைக்கப்படுகிறது என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அந்த பயணத்திற்கும் தேனுக்கும் நிலவுக்கும் என்ன முடிச்சு என்று எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா?
ஹனிமூனுக்கு பல விளக்கங்கள் சொல்லப்பட்டாலும் பிரதானமாக கூறப்படும் விளக்கத்தை தான் முதலில் சொல்ல இருக்கிறோம். பண்டைய பாபிலோனில் திருமணத்திற்குப் பிறகு, மணமகனின் தந்தை மணமகனுக்குத் தேனில் புளிக்கவைத்த மதுவை ஒரு மாதத்திற்கு தருவாராம். பாபிலோனிய நாட்காட்டி என்பது நிலவை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுவது. இதனால் தேன் கலந்த மதுவை தரும் மாதத்தை தேன் - நிலவு மாதம் என்று அழைத்தனர். அது பின்னாளில் தேனிலவாக மாறிவிட்டது.
இது பண்டைய ஹூன் அரசர் அட்டிலாவின் காலத்தில் இருந்து வரும் வழக்கம். திருமணத்திற்குப் பிறகு, புதுமணத் தம்பதிகள் ஒரு மாதத்திற்கு தினமும் தேன் கலந்த மதுவை குடிக்க வேண்டும். இந்த தேன் மதுவால் உடலியல் மாற்றங்கள் ஏற்படும். இந்த வழக்கம் புதிய உறவின் மகிழ்ச்சி மற்றும் இனிமையான தூக்கத்திற்கு வழிவகுக்கும் என்று நம்பினர்.
மற்றொரு விளக்கம், மூன் என்ற சொல் பருவங்களின் சுழற்சியைக் குறிக்கிறது. பொருள் திருமணத்திற்குப் பிறகு இருக்கும் காலம் புதிய நெருக்கத்தை உருவாக்கும். உடலுறவு இனிமையாகத் தோன்றும். காலம் ஆக ஆக இது மாறலாம். குறையலாம். அதனால்தான், திருமணமான உடனேயே தம்பதிகள் செலவழிக்கும் அந்தரங்க நேரத்தை ‘ஹனிமூன்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
எல்லோருக்கும் இந்த நெருக்க காலம் உடனே அமையாது. கொஞ்சம் புரிந்து அதற்கு ஏற்ப மாற காலம் எடுக்கும். அதனால் தான் ஒரு விஷயத்தை தொடங்கி குறைந்தது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரையான காலத்தை ஹனிமூன் பீரியட் அல்லது ஹனிமூன் காலம் என்று குறிப்பிடுவர். ஆனால், காரணம் என்னவாக இருந்தாலும் புதுமணத் தம்பதிகள் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்ளவும், சேர்ந்து நேரத்தைச் செலவிடவும், புதிய உறவின் அடித்தளத்தை வலுப்படுத்தவும் இது உதவும்.