கணவன், மனைவி இருவருமே ஒருவொருக்கு ஒருவர் மதிப்பளித்து, அன்போடும், அர்ப்பணிப்போடும் வாழ்ந்தால் இல்லறம், நல்லறமாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சில ஆண்கள் தங்கள் மனைவியை வேண்டுமென்றே அவமதிக்கக் கூடும். அப்படியான கணவனை கண்டுகொள்வது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. உங்களிடம் எப்போதுமே நேர்மையை கடைப்பிடிக்காத ஒருவர் அல்லது உங்கள் மீது எப்போதும் எரிந்து விழும் ஒருவர், உங்களுக்கு மதிப்பு அளிக்காமல் அவமதிக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக, கணவன், மனைவி இடையே பிரச்சினைகள் அதிகரித்து, இருவரும் பிரிந்து வீட்டீர்கள் என்றால், பாசாங்கு செய்யும் உங்கள் கணவரின் உண்மை முகம் வெளிப்படும். இத்தனை நாள் இணைந்து வாழ்ந்த துணையை பிரிந்து வந்ததை கணவனால் ஏற்றுக் கொள்ள இயலாது. இதனால், மீண்டும் மனைவியின் மனதில் இடம் பிடிக்கும் நோக்கில், ரொம்பவே நல்லவர் போல பேச தொடங்குவார்.
பிரிவுக்கு உங்களை குறை சொல்வது : உங்கள் முன்னாள் கணவர், ”பிரிவுக்கு காரணம் நீ தான்’’ என்று உங்கள் மீது குற்றம் சுமத்துவார். ஆனால், பெரும்பாலான நேரங்களில், இருவருடைய செயல்பாடுகளுமே பிரிவுக்கு காரணமாக இருக்கும். இருப்பினும், இதை மறைத்துவிட்டு, உங்கள் முன்னாள் கணவர் உங்களை மட்டும் குற்றம்சாட்டுகிறார் என்றால், உங்கள் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி, மீண்டும் இணைய விரும்புகிறார் என அர்த்தம்.
தொடர்ந்து உங்களுடன் இணைப்பில் இருப்பது : உங்களுடன் மீண்டும் இணைவதற்கு உங்கள் முன்னாள் கணவர் முயற்சி செய்கிறார் என்றால், அவர் இன்னும் முழு மனதாக உங்களை விட்டு பிரியவில்லை என்று அர்த்தம். என்னென்ன வாய்ப்புகள் கிடைக்குமோ, அதையெல்லாம் பயன்படுத்தி உங்களுடன் தொடர்பில் இருக்க முயற்சிக்கிறார் என்றால், மீண்டும் இணைய விரும்புகிறார் என்றே அர்த்தம்.
உங்கள் புதிய நட்புகளை கொச்சைப்படுத்துவார் : உங்கள் கணவரை பிரிந்த பிறகு, புதிய வாழ்க்கை துணையை தேடும் முயற்சியில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தெரிந்தால் போதும். அந்த புதிய நபர் குறித்து இல்லாத குறைகளை எல்லாம் சொல்லி, அவரை கொச்சைப்படுத்த உங்கள் முன்னாள் கணவர் முயற்சிப்பார். உங்கள் முயற்சிகளுக்கு தடையாக இருந்து, உங்கள் புதிய முயற்சி வெற்றி அடையாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்.