காதலர்களுக்காக மட்டும் இல்லை.. உங்கள் மனதில் உள்ள பாசத்தை உங்களது உறவுகளுக்கிடையே பரிமாற நினைக்கும் அனைவருமே கொண்டாடும் தினம் தான் காதலர் தினம். வெலன்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னதாக பிப்ரவரி 7 ஆம் தேதி முதலே கொண்டாட்டங்கள் தொடங்கிவிடுகிறது. ரோஸ்டே, ப்ரோபஸ் டே, சாக்லேட் டே, ஹக் டே, கிஸ் டே, லவ்வர்ஸ் டே என 7 நாள்கள் கொண்டாடும் இந்த காதலர் தினத்தின் மூன்றாவது நாள் தான் சாக்லேட் தினம். பிப்ரவரி 9 தேதி கொண்டாடப்படும் இந்நாளில் உங்களது அன்பிற்குரியவர்களுக்கு சாக்லேட் மட்டும் கொடுத்து சலிப்பாகி விட்டதா? இதோ உங்களுக்கான ஸ்பெசல் ரெசிபிகள் குறித்த சில டிப்ஸ்கள் உங்களுக்காக…
சாக்லேட் பீட்சா : இன்றைக்கு பீசாவை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது? எனவே சாக்லேட் தினத்தில் உனக்கானவர்களுக்கு நீங்கள் பீட்சா வாங்கி கொடுக்கலாம். வழக்கம் போல வெஜ், சிக்கன் பீசா போல் இல்லாமல் சாக்லேட் பீசாவை நீங்கள் செய்துக் கொடுக்கலாம். இதை செய்வதற்கு முதலில் நீங்கள் பீட்சா மாவை எடுத்து அதன் மேல் டார்க் சாக்லேட்டை தடவ வேண்டும். இரண்டு நிமிடம் பேக் செய்த பின்னர், நறுக்கிய நறுக்கிய ஸ்ட்ராபெர்ரிகளுடன் நட்ஸ் மற்றும் ஐசிங் சர்க்கரை சேர்த்து அலங்கரிக்கவும்.
சாக்லேட் சமோசா : சமோசா என்பது நாள் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடக்கூடிய நல்ல ரெசிபி. இனிப்பு மற்றும் மசாலா கலந்து சமோசா சாப்பிடுவது தான் வழக்கம். ஆனால் சாக்லேட் தினத்தில் நீங்கள் சாக்லேட்டைக் கொண்டு சமோசா செய்துக் கொடுக்கலாம். நிச்சயம் இது வெரைட்டியான மற்றும் தனிச்சுவையக் கொடுக்கும். இதைச் செய்வதற்கு முதலில் வழக்கம் போல கோதுமை அல்லது மைதா மாவை பிசைத்துக் கொள்ள வேண்டும். பிசையும் போது சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் மாவை ஒரு 10 நிமிடங்களுக்கு பிரிட்ஜில் வைத்து எடுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் டார்க் சாக்லேட் துகள்கள், உலர்ந்த பழங்கள் அல்லது உங்களுக்கு விருப்பமான நட்ஸ்களை எடுத்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பிசைந்துவைத்து மாவை உருட்டி சமோசா வடிவில் பாதியாக வெட்டவும். இதனையடுத்து கலந்து வைத்துள்ள சாக்லேட்டை உள்ளே வைத்து மடித்து கொள்ளவேண்டும். இறுதியில் ஒரு பாத்திரத்தில் மிதமான தீயில் வறுத்தெடுத்தால் போதும் சுவையான சாக்லேட் சமோசா ரெடியாகிவிட்டது.
டார்க் சாக்லேட் : சாக்லேட் சாப்பிட்டால் நிச்சயம் உடல் எடை அதிகரிக்கும் என பலர் வேண்டாம் என ஒதுக்குவார்கள். இதுப்போன்ற மனநிலையில் உள்ளவர்களுக்கு இந்த சாக்லேட் தினத்தில் நல்ல ரெசிபியைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் டார்க் சாக்லேட்டை தேர்வு செய்யலாம். மற்ற சாக்லேட்டுகள் போல் இல்லாமல் 70 சதவிகிதம் கோகோ இதில் உள்ளதால், ஆரோக்கியமானது மட்டுமில்லாமல் நல்ல சுவையை உங்களுக்குக் கொடுக்கும். குறிப்பாக மற்ற சர்க்கரை நிரப்பப்பட்ட பால் சாக்லேட்டை சாப்பிடுவதை விட மக்களை மிகவும் திருப்தியாக உணர வைக்கிறது.