சுற்றுலா வரிகள் பொதுவாக தங்குமிட வழங்குநர்கள் அல்லது விடுமுறை நிறுவனங்கள் மூலம் மறைமுகமாக விதிக்கப்படும் சிறிய கட்டணங்களாகும். உலகெங்கிலும் உள்ள அதிகமான இடங்கள் சுற்றுலா வரிகளை அறிமுகப்படுத்துகின்றன. சுற்றுலாவின் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தணிக்க மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க இந்த நிதி உதவுகிறது. அப்படி சுற்றுலா வரிகள் உள்ள நாடுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வரவைக் கட்டுப்படுத்த, வெனிஸ் சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளது. பல தசாப்தங்களாக, லகூன் நகரம் அதிக சுற்றுலாவினால் பாதிக்கப்பட்டுள்ளது, இறுதியில் ஜனவரி 16, 2023 முதல் இந்தக் கட்டணத்தை நடைமுறைப்படுத்த பட்டுள்ளது. புதிய டிஜிட்டல் முறையின் மூலம் பயணிகள் வரி செலுத்தி முன்பதிவு செய்வது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
செப்டம்பர் 23, 2022 அன்று பூட்டான் தனது அனைத்து சுற்றுலா கதவுகளையும் மீண்டும் திறந்தது. அதோடு சேர்த்து பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பயணிகளுக்கு ஒரு நாளைக்கு US $200 என்ற நிலையான மேம்பாட்டுக் கட்டணத்தையும் விதித்தது. இது வழிகாட்டிகள், தங்குமிடம் மற்றும் பிற சேவைகளின் செலவுகளுக்கு கூடுதலாக இருக்கும். இந்தியர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.1200 வரியாக செலுத்தவேண்டும்.