பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் பெருநிறுவன சமூகப் பொறுப்பின்(CSR) கீழ் சுற்றுலா வசதிகளின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான நினைவுச்சின்னங்களைத் தத்தெடுக்க ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.தத்தெடுப்பு திட்டத்தின் விவரங்கள் https://archaeology.karnataka.gov.in இல் கிடைக்கின்றன
முதற்கட்டமாக வெளியிடப்பட்ட மாண்டியா மாவட்டத்தில் 7 இடங்கள், குடகு மாவதில் 2 இடங்கள், மைசூரு, சாமராஜநகர் மாவட்டங்களில் தலா ஒரு இடம் உட்பட மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட 53 நினைவுச்சின்னங்களின் பட்டியலை இத்துறை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள நிறுவனங்கள் தங்கள் முன்மொழிவுகளை கர்நாடக அரசின் https://www.eproc.karnataka.gov.in தளத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம்.
DAMH இன் கூற்றுப்படி, சுற்றுலாவை மேம்படுத்துவதிலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதிலும் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் நினைவுச்சின்னங்களின் செழுமையான மற்றும் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில், உரிய அங்கீகாரத்தை அளிக்கும் வகையில் ‘உள்ளடங்கிய சுற்றுலா அனுபவ’த்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பண்டைய இந்தியாவில், கோயில்கள் பொதுவாக நீர் ஆதாரத்திற்கு அருகில் கட்டப்பட்டன அல்லது அவற்றை ஒட்டி தொட்டிகள் இருக்கும். கல்யாணி குளம், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேலுகோட்டில் உள்ளது.இந்த பழமையான கோயில் குளம் 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது மற்றும் மாவட்டத்தில் உள்ள 108 கோயில் குளங்களில் மிகப்பெரியதாக கருதப்படுகிறது.
ராஜாவின் சமாதி என்று அழைக்கப்படும் கத்திகே(Gaddige) கர்நாடகாவின் அழகிய மலைவாசஸ்தலங்களில் ஒன்றான மடிகேரியில் அமைந்துள்ளது. இந்த நினைவுச்சின்னம் அன்றைய இந்தோ-சார்செனிக் கட்டிட பாணியை சித்தரிக்கிறது. கொடவர்கள்(kodavas) அரச வம்சத்தினருக்காக மூன்று கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த மூன்றில் மிகப்பெரிய மத்திய கல்லறை, கொடவ மன்னர் தொட்டவீரராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி மகாதேவியம்மாவின் கல்லறையாகும்.
நல்நாத் அரண்மனை என்பது 1792 ஆம் ஆண்டு மன்னர் தொட்டா வீரராஜேந்திரனால் கட்டப்பட்ட அரண்மனை ஆகும். இது மடிகேரியில் இருந்து 35 கிமீ தொலைவில் காக்கபே அருகே உள்ள யேவகபாடி கிராமத்தில் அமைந்துள்ளது. திப்பு சுல்தானிடம் இருந்து தப்பிய முதலாம் லிங்கராஜாவின் மகன் தொட்டா வீரராஜேந்திரன். குடகின் அரசனாக முடி சூடி திப்பு தலைநகருக்கு அருகில் இதை காட்டினார்.