UN நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க் 2012 முதல் ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டு வருகிறது. 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களிடமிருந்து உலகளாவிய மகிழ்ச்சி அடிப்படையிலான கணக்கெடுப்புத் தரவை வரிசைப்படுத்துகிறது. இந்த ஆண்டு, அறிக்கை 137 நாடுகளை வரிசைப்படுத்தியது.
சமூக ஆதரவு, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் இல்லாமை - மகிழ்ச்சியை அளவிடுவதற்கு தரவரிசை ஆறு முக்கிய காரணிகளைப் பயன்படுத்தி வரிசைப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிரித்துள்ளது. இந்தியா 125ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் மக்கள் போக விரும்பாத மகிழ்ச்சி நிலை இல்லாத நாடுகளை பார்ப்போம்.
மகிழ்ச்சி அறிக்கையில் கடைசியாக இருக்கும் நாடு ஆப்கானிஸ்தான் தான். தலிபான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எக்கச்சக்க ஒழுங்குமுறை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள், தீவிர சட்டங்கள் என்று மக்களை அச்சுறுத்தும் பல நிகழ்வுகள் இங்கு அரங்கேறியுள்ளன. வெறும் 1.85 புள்ளிகள் பெற்று மக்களின் திருப்தியின்மையுடன் 137 ஆவது இடத்தில ஆப்கானிஸ்தான் விளங்குகிறது.
மேற்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சியரா லியோன் (Sierra Leone)டைட்டானியம்,பாக்சைட், தங்கம் போன்ற தாதுக்களின் முக்கிய உற்பத்தியாளராகவும், முதல் பத்து வைரம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. ஆனால் கடுமையான விதிமுறைகள், அரசாங்க ஊழல் , பாலின அடிப்படையிலான வன்முறை, பெண் பிறப்புறுப்பு சிதைப்பு போன்ற காரணங்களால் மகிழ்ச்சியற்ற நாடாக 135 ஆவது இடத்தில் உள்ளது.
அடுத்தபடியாக இருப்பதும் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுதான். 230% என்ற உலகிலேயே அதிக பணவீக்க விகிதம் கொண்ட நாடாக ஜிம்பாப்வே மகிழ்ச்சி இல்லாத நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ஆனால் இதே நாட்டில் தான் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான விக்டோரியா நீர்வீழ்ச்சி மற்றும் அளவின் அடிப்படையில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஏரி கரிபா ஏரி உள்ளன.
மகிழ்ச்சியற்ற நாகுகளின் 5 ஆவது இடத்தில் இருப்பதும் ஆப்பிரிக்க நாடு தான். அயன் படத்தில் நீங்கள் பார்த்திற்கும் நாடு தான் அது. காங்கோ ஜனநாயக குடியரசு கோபால்ட் மற்றும் தாமிரம், நீர்மின் திறன், மகத்தான பல்லுயிர் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய மழைக்காடு போன்ற செல்வங்களை கொண்டுள்ளது. ஆனால், ஆப்பிரிக்காவில் உள்ள ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். கிட்டத்தட்ட நான்கு பேரில் மூன்று பேர் ஒரு நாளைக்கு $1.90க்கும் குறைவான பணம் வைத்துக்கொண்டு வாழ்கின்றனர்.
பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் செய்த போதிலும் ஆப்பிரிக்க நடன மலாவி(malawi) உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ளது. 131 ஆவது இடத்தில உள்ள இது விவசாயத்தை பெரிதும் சார்ந்துள்ளது. மக்கள் தொகையில் 80% க்கும் அதிகமானோர் இதில் வேலை செய்கிறார்கள். அதனால் சின்ன விளைச்சல் மாறுபாடு கூட நாட்டை உலுக்கி விடுகிறது.