செயின்ட் பாங்க்ராஸ் இன்டர்நேஷனல் என்பது உலகின் மிகச் சிறந்த மற்றும் அழகான ரயில் நிலையமாகும். இது விக்டோரியன் கோதிக் கட்டிடக்கலையின் பிரமாண்டமான படைப்பாகும். 1868 இல் திறக்கப்பட்ட இது இன்றும் ஒரு பரபரப்பான ரயில் நிலையமாக பயன்பாட்டில் உள்ளது. ஒரு கடிகார கோபுரம், கண்ணாடி குவிமாட கூரை என்று ஐரோப்பிய பாணியில் இருக்கும் இதன் வெளிப்புறம் பார்ப்பதற்கு கொஞ்சம் சென்னை சென்ட்ரல் சாயலில் இருக்கும்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷன் உலகின் மிகப் பிரமாண்டமான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். 1912 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த நிலையம் மற்றும் தேசிய வரலாற்றுச் சின்னம் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டு மீட்டெடுக்கப்பட்டது. அமெரிக்காவின் அநேக படக்காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.
பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் மத்திய நிலையத்தை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிங் லியோபோல்ட் II என்பவர் கட்டியுள்ளார்.1905 இல் கட்டி முடிக்கப்பட்ட இது 20 வகையான பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. பிரமாண்டமான பழங்கால கடிகாரம், இரும்பு மற்றும் கண்ணாடி வால்ட் கூரை, அலங்கரிக்கப்பட்ட பலுஸ்ட்ரேட்கள் கொண்ட ஒரு கேண்ட் படிக்கட்டு என்று ஒரு அரண்மனையை போலவே காட்சியளிக்கும்