ஆங்கிலேயே இயற்பியல் விஞ்ஞானி கடந்த 17ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக புவி ஈர்ப்பு சக்தியை கண்டறிந்தார். அதன் அடிப்படையில், இந்த பூமியில் உள்ள அனைத்து பொருட்களுமே புவி ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டது என்று கருதப்படுகிறது. புரியும்படி சொன்னால், நம் பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் நாணயம் தவறுகிறது என்றால், கட்டாயம் அது கீழ் நோக்கி பாய்ந்து விழ வேண்டும். நிச்சயமாக அது பறந்து செல்லாது. ஆனால், இந்தப் பூமியில் புவி ஈர்ப்பு விசை வேலை செய்யாத மர்மமான இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
மேல்நோக்கி செல்லும் அருவி: தமிழில் நீர்வீழ்ச்சி என்ற சொல் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீரானது கீழ் திசையை நோக்கி செல்லுதலே இந்த சொல்லுக்கான பெயர் காரணம் ஆகும். ஆனால், நீர் மேல் நோக்கி பாயும் விந்தையை நீங்கள் பார்த்ததுண்டா? மகாராஷ்டிர மாநிலம், கொங்கன் கடலோரப் பகுதியை ஒட்டிய டெக்கான் மலைப்பகுதியில் இந்த அருவி இருக்கிறது. இங்கு காற்றின் திசை மேல்நோக்கி பலமடங்கு வேகமாக சுழல்வதால் அருவியானது மேல்நோக்கி பாய்கிறது.