முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சோலோ ட்ராவல் செய்யும் பெண்களே.. இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சுக்கோங்க

சோலோ ட்ராவல் செய்யும் பெண்களே.. இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சுக்கோங்க

Travel tips | எல்லா இடங்களிலும் ஆன்லைன் பேமெண்ட்டை நம்பி இருக்காமல் கையில் பணமாக வைத்திருங்கள்

  • 110

    சோலோ ட்ராவல் செய்யும் பெண்களே.. இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சுக்கோங்க

    சமீப காலமாக பெண்கள் தனியாக பயணம் செய்ய பெரிதும் விரும்புகிறார்கள். பத்தி பயணமோ, மலைவாஸ்தலங்களுக்கான பயணமோ சாகச பயணமோ ஏன் சுதந்திரமாக தனியாக செல்ல கூடாது. நண்பர்களையும் உறவினர்களையும் சார்ந்து தயங்கி ஏன் பயணங்களை தள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணம் எழ ஆரம்பித்துள்ளது. இது நல்ல விஷயம் தான். ஆனால்….பெண்கள் தனியாக பயணம் செய்ய இந்த உலகம் இன்னும் பாதுகாப்பானதாக முழுமையாக மாறவில்லை என்றே சொல்லலாம்.

    MORE
    GALLERIES

  • 210

    சோலோ ட்ராவல் செய்யும் பெண்களே.. இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சுக்கோங்க

    முக்கியமாக முதல்முறை பயணம் செய்பவர்களுக்கு உள்ள தயக்கமும் பயமும் அப்படியே அவர்கள் முகத்தில் பிரதிபலிப்பதாய் இருக்கும். ஆனால் இதைத்தாண்டி அவர்கள் சரியான இலக்கைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து , அறிமுகமில்லாத பகுதிகளுக்குச் செல்வது வரை, பெண்கள் தன்னம்பிக்கையுடன் தங்கள் தனிப் பயண சாகசங்களைத் தொடங்கத் தயாராக இருக்க உதவும் டிப்ஸ்களை சொல்கிறோம்.

    MORE
    GALLERIES

  • 310

    சோலோ ட்ராவல் செய்யும் பெண்களே.. இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சுக்கோங்க

    நீங்கள் முதல் முறையாக சாகசப் பயணம் செய்பவராக இருந்தாலும் சரி அல்லது அனுபவமுள்ள பயணியாக இருந்தாலும் சரி, இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்கு நம்பிக்கையுடன் புதிய இடங்களை நீங்களே ஆராய்வதற்குத் தயாராக்க உதவும்.

    MORE
    GALLERIES

  • 410

    சோலோ ட்ராவல் செய்யும் பெண்களே.. இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சுக்கோங்க

    தனியாக பயணிக்க முடிவெடுத்தால் முதலில், சில அடிப்படைகளை தயார்படுத்தி வைத்திருங்கள். ஒரு இடத்திற்கு போக திட்டமிட்டால் அங்குள்ள சுற்றுலா தளங்கள், பார்வையிடும் நேரம், வழக்கமான போக்குவரத்து முறை ,இரவில் சாலைகள் எவ்வளவு நெரிசலாக இருக்கும், பயண இலக்குகளுக்கும் தங்குமிடம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை எல்லாம் பார்ப்பதோடு நோட்பேடில் குறித்து வையுங்கள். இவை உங்கள் பணத்தையும் நேரத்தையும் கணக்கிட உதவும்.

    MORE
    GALLERIES

  • 510

    சோலோ ட்ராவல் செய்யும் பெண்களே.. இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சுக்கோங்க

    தனியாக பயணிக்கும் பெண்கள் முடிந்தவரை அவர்களால் அதிகபட்சம் தூக்கக்கூடிய சுமையில் இருந்து கொஞ்சம் குறைவான அளவு பைகளை வைத்துக்கொள்ளுங்கள். அதோடு பாதுகாப்பிற்கு பெப்பர் ஸ்ப்ரே, சிறிய ஷாக் இயந்திரம் போன்றவற்றை கையில் வைத்துக்கொள்ளுங்கள். அதோடு சானிட்டரி நாப்கின், ஹாண்ட் வாஷ். சானிடைசேர் போன்ற சுகாதார பொருட்களையும் எப்போதும் வைத்திருங்கள். ஒரே பையாக இருப்பது நல்லது.

    MORE
    GALLERIES

  • 610

    சோலோ ட்ராவல் செய்யும் பெண்களே.. இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சுக்கோங்க

    பயணத்தில் சந்திக்கும் அனைவரையும் அனுப்ப முடியாது. அதே நேரம் அவர்களை உதாசீனம் செய்யவும் முடியாது. அதனால், நீங்கள் தனியாக பயணிக்கும் போது சாப்பிட அல்லது அருந்துவதற்காக உணவு பொருட்களை பயணம் தொடங்கும் முன்னரே நீங்களே வாங்கி பையில் வைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் , குளுக்கோஸ் போன்ற பொருட்களை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்.

    MORE
    GALLERIES

  • 710

    சோலோ ட்ராவல் செய்யும் பெண்களே.. இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சுக்கோங்க

    நீங்கள் திட்டமிடும் போது ஆகும் செலவு கணக்கை தாண்டி கூடுதலாக கொஞ்சம் பணத்தை வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல எல்லா இடங்களிலும் ஆன்லைன் பேமெண்ட்டை நம்பி இருக்காமல் கையில் பணமாக வைத்திருங்கள். வழியில் சில இடங்களில் நெட்வொர்க் சிக்னல் இல்லாமல் போகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரே இடத்தில் பணத்தை வைக்காமல், பையில் கொஞ்சம், உடைகளில் கொஞ்சம், போன் கவர்களில் கொஞ்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 810

    சோலோ ட்ராவல் செய்யும் பெண்களே.. இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சுக்கோங்க

    பயணத்தில் சந்திக்கும் அனைவரையும் அனுப்ப முடியாது. அதே நேரம் அவர்களை உதாசீனம் செய்யவும் முடியாது. அதனால், நீங்கள் தனியாக பயணிக்கும் போது சாப்பிட அல்லது அருந்துவதற்காக உணவு பொருட்களை பயணம் தொடங்கும் முன்னரே நீங்களே வாங்கி பையில் வைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் , குளுக்கோஸ் போன்ற பொருட்களை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்.

    MORE
    GALLERIES

  • 910

    சோலோ ட்ராவல் செய்யும் பெண்களே.. இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சுக்கோங்க

    மலிவான தங்குமிடங்களைத் தேடி புக் செய்யும் முன்னர் அந்த இடத்திற்கான ​​வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் பார்த்து முடிவெடுங்கள். இருப்பிடம் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், வெளிச்சம் இல்லாமலும் இருந்தால் ,அங்கு தங்குவதைத் தவிர்க்கலாம். ஊருக்குள் ஆள் நடமாட்டம் உள்ள இடத்தில் உள்ள விடுதிகளை தேர்ந்தெடுங்கள். ஹோட்டல்களுக்கு பதிலாக மகளிர் தங்கும் விடுதியில் தங்குவது பாதுகாப்பானதாக அமையும்.

    MORE
    GALLERIES

  • 1010

    சோலோ ட்ராவல் செய்யும் பெண்களே.. இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சுக்கோங்க

    அதே போல உங்களது அசல் ஆவணங்கள் இல்லாவிடினும் ஆவண நகல்களை எப்போதும் கையில் வைத்திருங்கள். பயணத்தின் போது அடையாளத்திற்கும், ஒரு சில அனுமதிகள் பெறவும் இது உதவியாக இருக்கும். ஏதேனும் பிரச்சனை வந்தால் கூட இந்த ஆவணங்கள் உங்கள் அடையாளத்தை தெரிவிக்கும். முடிந்தால் அந்த இடத்தில் இருக்கும் பெண் வழிகாட்டிகளின் உதவிகளை பெறலாம்.

    MORE
    GALLERIES