முகப்பு » புகைப்பட செய்தி » அழகிய அமைப்புடன் மலைகளுக்கு நடுவே தொங்கும் பிரமாண்ட கோட்டைகளை பற்றி தெரியுமா.?

அழகிய அமைப்புடன் மலைகளுக்கு நடுவே தொங்கும் பிரமாண்ட கோட்டைகளை பற்றி தெரியுமா.?

மலை உச்சியின் மீது தொங்கிக்கொண்டு இருப்பதுபோல இருக்கும் அழகிய கோட்டைகளை இங்கே பார்க்கலாம்..

 • 16

  அழகிய அமைப்புடன் மலைகளுக்கு நடுவே தொங்கும் பிரமாண்ட கோட்டைகளை பற்றி தெரியுமா.?

  இந்த உலகத்தில் எத்தனையோ கோட்டைகள் உள்ளன. அதன் பிரமாண்டத்தாலும், கட்டிட அமைப்பாலும் பல கோட்டைகள் பிரபலமாகியுள்ளன. ஆனால் மலை உச்சியின் மீது தொங்கிக்கொண்டு இருப்பதுபோல இருக்கும் அழகிய கோட்டைகளை பற்றி தான் இந்தத் தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.

  MORE
  GALLERIES

 • 26

  அழகிய அமைப்புடன் மலைகளுக்கு நடுவே தொங்கும் பிரமாண்ட கோட்டைகளை பற்றி தெரியுமா.?

  ஸ்வாலோஸ் நெஸ்ட் கோட்டை என்று அழைக்கப்படும்  இது கிரிமியன் தீபகற்பத்தில் யால்டாவிலிருந்து கருங்கடலைக் பார்த்தபடி  40 மீட்டர் குன்றின் மீது அமைந்துள்ள இது உக்ரைனில் அதிகம் பார்வையிடப்பட்ட இடங்களில் ஒன்றாகும். இந்த கோட்டை 20 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டது. 1895 இல் பழைய ரஷ்ய ஜெனரலுக்காக கட்டப்பட்ட மரவீடு, 1911 ஆம் ஆண்டில் கோதிக் பாணியில் மறுசீரமைக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 36

  அழகிய அமைப்புடன் மலைகளுக்கு நடுவே தொங்கும் பிரமாண்ட கோட்டைகளை பற்றி தெரியுமா.?

  லீக்டென்ஸ்டைன் இளவரசரின் குடும்ப இருப்பிடமாக  வியன்னா வூட்ஸின் தெற்கு விளிம்பில் அமைந்துள்ள லிச்சென்ஸ்டைன் கோட்டை இன்று அருங்காட்சியகமாக உள்ளது. கோட்டையானது லிச்சென்ஸ்டைனின் தலைநகரான வடுஸ் நகரத்திற்கு பெயர் பெற்றது.

  MORE
  GALLERIES

 • 46

  அழகிய அமைப்புடன் மலைகளுக்கு நடுவே தொங்கும் பிரமாண்ட கோட்டைகளை பற்றி தெரியுமா.?

  டன்லூஸ் கோட்டை ஐரிஷ் அரண்மனைகளில் மிகவும் அழகிய இடமாகும். 1000 ஆம் ஆண்டுகளில் இருந்து குடியேறியதற்கான சான்றுகளுடன், 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளின் தற்போதைய கோட்டை இடிபாடுகள்வரை அனைத்தையும் ஐயர்லாந்து மலை உச்சியில் காணலாம். இது பகைமை கொண்ட மெக்குயிலன் மற்றும் மக்டோனல் குலங்கள் இருவராலும் வசிக்கப்பட்ட இடமாகும்..

  MORE
  GALLERIES

 • 56

  அழகிய அமைப்புடன் மலைகளுக்கு நடுவே தொங்கும் பிரமாண்ட கோட்டைகளை பற்றி தெரியுமா.?

  ஐரோப்பாவின் ஆஸ்திரிய நாட்டில் உள்ள 900 ஆண்டுகள் பழமையான ஹோஹென்வெர்ஃபென் கோட்டை ஒரு அசாதாரண நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது. முன்னாள் தற்காப்பு கோட்டை யான இது  சால்சாக் நதி பள்ளத்தாக்குக்கு மேலே சிம்மாசனத்தாய் போல அமைந்துள்ளது. சாகச மற்றும் ஐரோப்பிய கலாச்சாரத்தை தெரிந்துகொள்ள விரும்பும் மக்களுக்கு  அற்புதமான அனுபவங்களை வழங்கும்.

  MORE
  GALLERIES

 • 66

  அழகிய அமைப்புடன் மலைகளுக்கு நடுவே தொங்கும் பிரமாண்ட கோட்டைகளை பற்றி தெரியுமா.?

  டன்னோட்டர் கோட்டை என்பது ஸ்டோன்ஹேவனுக்கு தெற்கே சுமார் 2 மைல் தொலைவில் ஸ்காட்லாந்தின் வடகிழக்கு கடற்கரையில் ஒரு பாறை பகுதியில் அமைந்துள்ள ஒரு பாழடைந்த இடைக்கால கோட்டை ஆகும். எஞ்சியிருக்கும் கட்டிடங்கள் பெரும்பாலும் 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. ஆனால் இந்த தளம் ஆரம்பகால இடைக்காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

  MORE
  GALLERIES